பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

"பஃறுளி யாற்றுடன் பன்மலை

                   யடுக்கத்துக்

குமரிக் கேர்டும் கொடுங்கடல்

                     கொள்ள"

என்னும் சிலப்பதிகார அடிகள் ஒரு கடல் தோளைக் குறிக் கின்றன. இது பேரழிவைக் குறிப்பது. தமிழகத்திலிருந்து இலங்கையைப் பிரித்த பெருங்கடல்கோளே சிலம்பு கூறும் இப்பேரழிவை உண்டாக்கியிருக்கலாம். அதனால் பாண்டிய நாட்டின் தென் எல்லை குமரியாறாயிற்று என்று கொள்ளலாம் .

கபாடபுரம் அழியக் காரணமாயிருந்த கடல்கோள் இலங்கையில் நிகழ்ந்த இரண்டாம் அல்லது மூன்றாம் கடல் கோளாயிருத்தல் வேண்டும். இரண்டாம் கடல்கோள் குறிப்பிடத்தக்க இழப்பை உண்டாக்கவில்லை என்று. இலங்கை வரலாறு இயம்புகின்றது.

எனவே, இலங்கையில் தோன்றிய மூன்றாம் கடல் கோளே கபாடபுரத்தை அழித்தது என்று கொள்வது, மேலே காட்டப்பெற்ற பல காரணங்களை நோக்கப்பொருத்த மாகும். ஆகவே, வேறு தக்க சான்றுகள் கிடைக்கும் வரையில், தொல்காப்பியர் கி.மு.4ஆம் நூற்றாண்டின்ர் என்று கருதுதல் தகும்.அவர் காலம் ஏறத்தாழக் கி.மு.300 என்று கொள்ளலாம்.

14. காதை 11, வரி 19-20;காதை 8 , வரி 1- அடியார்க்கு நல்லார் விளக்கவுரை.

15. வடமொழியில் வேதங்களையும் பிராமணங்களையும். எழுதிய_ஆரியர் ஏறத்தாழக் கி.மு. 2300 அல்லது கி.மு. 2200இல் இந்தியாவிற் புகுந்தனர் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து (N.K. Dutt, Aryanisation of India, pp. 39-58). ஆரியர் ஏறத்தாழக் கி. மு. 7ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்திருக்கலாம் என்று பேராசிரியர் வி. அரங்காச் சாரியார் கூறியுள்ளார்(இது முன்பே கூறப்பட்டது). எனவே, கி. மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழில் வடசொற்கள் கலக்கத் தொடங்கியிருத்தல் வேண்டும் என்று நினைப்பது. பொருத்தமாகும். இங்ங்னம் காலப்போக்கில் நீக்க முடி யாத அளவு வடசொற்கள் தமிழிற் கலந்தமையாற்றான் தொல்காப்பியர் வடசொல் தமிழிற் கலத்தலைப் பற்றி" இரண்டு சூத்திரங்கள் கூறினார்; பிராமணர் தொழில்களை யும் கூறினார். எனவே, தொல்காப்பியர், வடமொழியாளர் தமிழகம் வந்து தங்கிச் சில நூற்றாண்டுகளேனும் கழிந்த பின்னரே தோன்றியவராதல் வேண்டும் என்பது த்ெள் வாதல் காண்க.