பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


டாக்டர் மா.இராசமாணிக்கனார்

 தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கை உடையவர்: எல்லாத் தெய்வங்களையும் ஒப்ப மதிப்பவர். அவர் இன்ன சமயத்தவர் என்று அறுதியிட்டுக் கூற இயலாது.

(3) தொல்காப்பியத்தின் சிறப்பியல்புகள்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை உடிை யது; 1502 நூற்பாக்களை உடையது (எழுத்ததிகாரம் 488 நூற்பாக்களையும், சொல்லதிகாரம் 463 நூற்பாக்களையும், பொருளதிகாரம் 656 நூற்பாக்களையும் உடையது)".

எழுத்ததிகாரம்

 எழுத்ததிகாரத்தில் நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்னும் ஒன்பது இயல்கள் உள்ளன.
மக்கள் ஒருவருக்கொருவர் கருத்தைத் தெரிவிப்பதற்கு உரியது சொற்றொடர். ஒரு சொற்றொடர் பல சொற்களைக் கொண்டிருப்பது. ஒவ்வொரு சொல்லும் எழுத்துகளால் ஆகியது. எழுத்தின்றேல் சொல் இல்லை; சொல் இன்றேல் சொற்றொடர் இல்லை. எனவே, மொழிக்கு உயிர்நாடியாக இருப்பது எழுத்தென்பது வெள்ளிடைமலை: ஆதலால் தொல்காப்பியர் எழுத்துகளின் தன்மை முதலியவற்றை

16. தொல்காப்பியர் சமணர் என்று கூறுவோர் வாதத் தையும் அதற்குரிய மறுப்பையும் வித்துவான் க. வெள்ளை வாரணனார் எழுதியுள்ள 'தொல்காப்பியம்’ ’ என்னும் நூல் (பக். 159-172) நோக்கி உணர்க.

இந்நூற்பாக்கள் 1595 என இளம்பூரணரும், 1611 என்று நச்சினார்க்கினியரும் வகுத்து உரை எழுதியுள்ளனர்.

த-8