பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

டாக்டர்.மா.இராசமாணிக்கனார்

கின்றன. இந்நூற்பாவினால் ஆணை, வட்டம், நட்டம், கண்ணன் எனப் பாதகமாய்ச் சிதைந்து வருபவனவும் தமிழிற் கொள்ளப்பட்டன என்று உரையாசிரியர்களான சேனாவரை யரும் நச்சினார்க்கினியரும் கூறியுள்ளனர்.

இவ்விரண்டு நூற்பாக்களாலும் நாம் அறிவது யாது? தொல்காப்பியர் காலத்தில் வடமொழிச் சொற்கள் சில தமிழிற் கலக்கும் கிலைமை ஏற்பட்டது. அதனால்: அவற்றைத் தமிழோசை ஊட்டியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் கருதினார் என்பன இவ்விரு நூற்பாக் களாலும் புலப்படும். ஆசிரியர் வகுத்த இம்முறை, காலத் தால் பிற்பட்ட கம்பர் முதலிய புலவர்களாலும் பொன்னே போல் போற்றப்பட்டது. இங்ங்ணம் குறிப்பிட்ட வரையறை யோடு குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றியதால்தான் தமிழ் மொழி தனக்குள்ள ஆற்றலில் சிதையாமல் இன்றளவும் இயங்கிவருகிறது என்னும் உண்மையைத் தமிழ்மக்கள் நன்கு உணர்தல் வேண்டும். பொருளதிகாரம்

எழுத்தும் சொல்லும் பற்றியே உலகத்து உள்ள எல்லா மொழிகளிலும் இலக்கணம் உள்ளது. எழுத்தையும் சொல்லையும் பயன்படுத்தும் மனிதனுடைய வாழ்க்கையைவாழ்க்கையின் இலக்கணத்தை உணர்த்தும் இலக்கண நூல் உலகத்து வேறெம்மொழியிலும் இல்லை. மனிதனுடைய வாழ்க்கையை உணர்த்தும் பகுதியாக-இலக்கணமாகத் தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் விளங்குகின்றது."

மனித வாழ்க்கை மனிதனது இல்லத்தைப் பற்றியது, அவனோடு தொடர்பு கொண்ட வெளியுலகத்தைப் பற்றியது என இருவகைப்படும். இல்வாழ்க்கை பற்றிய செய்திகள் அகப்பொருள் என்றும், மற்ற அனைத்தும் புறப்பொருள் என்றும் சொல்லப்படும். மனிதன் அடையத்தக்க அறம்


2. T. R. Sasha Ayyangar, Dravidian India, p. 179