பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

பயிராகும் மரங்கள், அந்நில மக்களின் தொழில்கள் முதலி யன அகத்திணையியலில் கூறப்பட்டுள்ளன.

தலைவன் கப்பலிற் செல்ல நேருமாயின் தன் மனைவியுடன் செல்லான் என்று பொருள்படத் தொல்காப்பியர்,

"முந்நீர் வழக்கம் மகடுஉவோ டில்லை"

என்றார் (அகத்திணையியல்-34). போருக்காக அல்லது வாணிகத்திற்காகவே கப்பல் பயன்படுத்தப்படும். சங்ககாலத் தமிழர் கடல் கடந்த நாடுகளில் சென்று வாணிகம் செய் தமைக்கே சான்றுகள் பல உண்டு. இதனால் தொல்காப்பி யர் காலத்திற்கு முன்னரும் அவர் காலத்தும் தமிழர் கடல் வாணிகம் கருதிக் கப்பலிற் சென்றனர், அங்ங்ணம் சென்ற போது தாம் மட்டுமே சென்றனர் என்பது இங்கு அறியத் தகும். மிகச் சில ஆண்டுகள் வரையில் இந்த வழக்கம் தன வணிகரிடம் இருந்துவந்தது இங்கு நினைக்கத் தகும்.

ஒருவன் ஒருத்தியைக் கண்டு காதல் கொள்வதும், அக் காதல் வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளும், அவ்வாழ்வில் தொடர்பு கொள்ளும் தோழி, செவிலி, தோழன், பாணர், அறிவர் முதலியோர் தொழில்களும் காதலர் களவு வாழ்க்கை யும் களவியலில் இடம் பெற்றுள்ளன.

பலர் அறிய மணந்துகொண்ட தலைவனும் தலைவியும் வாழ்க்கை நடத்தும் முறைமை கற்பியலில் கூறப்பம் டுள்ளது. கணவன்-மனைவி வாழ்க்கை, கணவன் பல செயல்களை முன்னிட்டு மனைவியைப் பிரிதல், அப் பிரிவுகள் காரணமாக மனைவி வருந்துதல், தோழி முதலியோர் அவளைத் தேற்றுதல் போன்ற பல செயல்கள் இவ்வியலில் இடம் பெற்றுள்ளன.

மக்களது இன்ப வாழ்க்கைக்கு அவரது நாடு, உரிமை நாடாக விளங்குதல் வேண்டும். தம்மாட்சி உடைய நாட்டில்தான் மக்களது இன்பம் களங்கமின்றி இருத்தல் இயலும். இந்த உண்மையை உணர்ந்த நம் முன்னோர்