பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


விரிநூல், விரிதொகைநூல், மொழி பெயர்ப்பு நூல் எனப் பலவகை நூல்கள் அவர் காலத்தில் இருந்தன. பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பெற்ற நூல்கள் அப்பழங் காலத்திலேயே இருந்தன என்பது இந்நூற்பாவால் நன்கு புலனாகின்றதன்றோ?

1. "கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி புறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கம்"

"முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரைகிலை யின்றே ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்"

தொல்காப்பியர்க்கு முன்பே ஆற்றுப்படை நூல்கள் இருந்தன என்பதை இவ்விரண்டு நூற்பாக்களும் உணர்த்துகின்றன அல்லவா?

அகப்பொருள் பற்றிய நூல்கள் கலிப்பாவிலும் பரிபாடலிலும் வரும் எனத் தொல்காப்பியர் கூறுவதால், அவர்க்கு முன்பும் அவர் காலத்திலும் அவ்விரு பாக்களிலும் அமைந்த செய்யுள் நூல்கள் இருந்தமை வெளிப்படை.

2. "குழவி மருங்கினும் கிழவ தாகும்" என்று தொல்காப்பியர் கூறுவதால், பிற்காலப் பிள்ளைத் தமிழ் போன்ற நூல்கள் தொல்காப்பியர் காலத்தில் இருந்திருக்கலாம் எனக் கருதுதல் தவறன்று.

1, மரபியல் 97; ரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு, ப. 803. 2. புறத்திணை இயல், 36, 3. எச்சவியல், 66 4. அகத்திணையியல், 53. 5. புறத்திணையியல்,