பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


பாடப்படுவன அம்மை வனப்பமைந்தநூல்கள் ஆகும். ' பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவ்வனப்பிறகு எடுத்துக் காட்டாம். எனவே, இவைபோன்ற நூல்கள் தொல்காப்பியர் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும்.

2. சிறந்த செய்யுள் நடையில் பொலிவுபெற்ற பாடல்கள் அழகு என்னும் வனப்புடையவை. எட்டுத் தொகை நூல்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும். எனவே, இவை போன்ற தொகை நூல்கள் தொல்காப்பியர் காலத் திலும் இருந்திருத்தல் வேண்டும்.

3. உரையொடு புணர்ந்த பழைமைப் பொருளாகக் கதை வடிவில் வருவது தொன்மை என்னும் வனப்பாகும்.19 உரையொடு புணர்தல்-நெடுங்காலமாகப் பலரால் சொல்லப் பட்டு வருதல் பழைமை-பழங்கதை, பழைமைத்தாகிய பொருள்மேல் வருவன. இராமசரிதை, பாண்டவ சரிதை முதலியவற்றின்மேல் வரும் செய்யுள் என்று இளம்பூரணர் கூறுவர். ஆயின், பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் "உரையொடு புணர்ந்த' என்னும் தொடர்க்கு உரைநடை யுடன் விரவிய' எனப்பொருள் கொண்டனர்; 'பெருந்தேவ னாரால் பாடப்பட்ட பாரதமும் தகடூர் யாத்திரையும் போல் வன, என்று குறித்துள்ளனர்.

4. இழும் என்னும் ஓசையையுடைய மெல்லென்ற சொற்களால் விழுமிய பொருள் பயக்கும்படி செய்யப்படு வனவும், பரந்த மொழியால் அடிநிமிர்ந்து வரத் தொடுக்கப் படுவனவும் தோல் என்னும் வனப்பைப் பெற்றவை. இளம் பூரணர் முதலுக்கு எடுத்துக்காட்டாக மார்க்கண்டேயனார் காஞ்சியையும், இரண்டாவதற்கு எடுத்துக்காட்டாகக் கூத்த

14. டிை, 235. 15. டிை,236. 16. டிை,237. 17. டிை,238.

த-9