பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


திற்கு உரைவரைந்த சேனாவரையர் சொல்லதிகாரத்துப் பெயரியலில், பெண்மையடுத்த மகனென் கிளவியும்' என்பதன் சிறப்புரையாக, புறத்துப்போய் விளை யாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோக்கத்தார் இக்காலத்தும் பெண்மகன் என்று வழங்குப,' " என்று பயிலுமிடம் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். இவ்வாறு தென்பாண்டி நாட்டைச் சேர்ந்த மாறோக்கம் என்ற பகுதியின் வழக்கினைக் கூறியவர், கல்வெட்டில் குறிக்கப்பெற்ற ஆற்றூர்ச் சேனாவரையராய் இருக்கலாம். அக் கல்வெட்டின் காலம் கி.பி.1276.8

சேனாவரையர் நன்னூலார் கொள்கைகளை மறுத்து உரை கூறுதலால் பவணந்தி முனிவருக்குப்பிற்பட்டவராவர். இவரது காலம் கல்வெட்டில் கண்டபடி கி.பி. 13ஆம் நூற் றாண்டின் பிற்பகுதி எனலாம். இவர் வடமொழிப் புலமை நிரம்பியவர். இவரது உரை சொல்லதிகாரத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது.

பேராசிரியர்

பேராசிரியர் நன்னூல் சூத்திரத்தையும் சூத்திரக் கருத்தையும் தமது தொல்காப்பிய உரையில் எடுத்து ஆண்டுள்ளார். ஆதலின் இவர் பவணந்தி முனிவருக்குப் பிற்பட்டவர் என்பது தெளிவு. எனவே, இவர் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 14ஆம் நூற்றாண்டு என்று கொள்ளலாம். இவரது உரை மெய்ப்பாட்டியல், செய்யுளியல், உவமையியல், மரபியல் என்னும் நான்கு இயல்களுக்கே கிடைத்துள்ளது.

நச்சினார்க்கினியர் .

நச்சினார்க்கினியர் மதுரையைச் சேர்ந்தவர்; பாரத்து வாசகோத்திரத்தினர். இவர் வடமொழியிலும் தென்மொழி

3. 465 of 1929–30, 4. கலைக்களஞ்சியம், 7, பக். 681.