பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 143


மேகலையின் காலத்துக்கு மிக முற்பட்டது திருக்குறள்). என்பதைச் சாத்தனார் சதுக்கப் பூதத்தின் வாயிலாக நமக்கு. உணர்த்தும் திறன் வியந்து பாராட்டற்குரியது அன்றோ? சாத்தனார் உணர்த்துவது உண்மை என்பதை எட்டுத் தொகை பத்துப்பாட்டு முதலிய நூல்கள் திருக்குறள் சொற்களையும் தொடர்களையும் கருத்துகளையும் எடுத்து ஆளுவதிலிருந்து நன்கறியலாம்.

திருக்குறளும் சங்க நூல்களும்

 தமிழகத்தில் கி. பி. 300க்கு முற்பட்ட பல்வேறு காலங் களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாடிய பாக்களின் தொகுதியே எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் ஆகும். இவை கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்குள்ளேயோ அல்லது அதற்குப் பிற்பட்ட காலத்திலேயோ தொகுக்கப் பெற்றவை. இவற்றின் மேல் எல்லை இது என அறுதியிட்டுக் கூறத்தக்க சான்றில்லை. இப்பாடல்களைப் பாடிய புலவர் பலர் தம் பாக்களில் திருக்குறள் கருத்துகளையும் சொற்களையும் சொற்றொடர்களையும் ஆண்டுள்ள உண்மை, சங்கநூற் பயிற்சியுடையார்க்கு நன்கு விளங்கும்.
  இடச்சுருக்கம் கருதி, ஒவ்வொரு நூலுக்கும் சில எடுத்துக்காட்டுகளைக் காட்டிச் செல்லுதலே சாலும். 

நற்றிணை 1. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு.' (குறள்-40)

  7. திருக்குறட் கருத்துகளையும் தொடர்களையும் சொற்களையும் சங்கப் புலவர்கள் ஆண்டனர் என்பதற்கு மாறாக, சங்கப் புலவர்தம் பாக்களை நன்றாகப் பயின்று. அக்கருத்துகளைத் திருவள்ளுவர் தமது அறநூலில் பெய்து வைத்தார் என்று ஏன் கொள்ளலாகாது? அங்கனம் கொள்ளின், திருவள்ளுவர் சாத்தனார் காலத்திற்கு,