பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 161

அனைவர் உரையிலும் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்தது என்பது தமிழறிஞர் கருத்து. திருவள்ளுவருக்கும் இவ்வுரையாசிரியர்களுக்கும் இடையில் 1300 அல்லது 1400 ஆண்டுகள் கழிந்திருக்கலாம். திருவள்ளுவர் காலத்திற்கும் உரையாசிரியர் காலத்திற்கும் இடையில் ஏற்பட்ட சமுதாய மாறுதல்கள் பல; அரசியல் மாறுதல்கள் பல. வள்ளுவர் காலத்தில் சாதிகள் இல்லை. சாதிகள் பல்கிப் பெருகிய காலத்தில்-ஒரு சாதிக்கு ஒரு நீதி கூறிய காலத்தில் வாழ்ந்த உரையாசிரியர்கள் முன்பு கூறப்பெற்ற தொல்காப்பிய உரையாசிரியர்கள் போலவே, தத்தம் சமயச் சார்பு பற்றியும் தம் காலநிலைக்கு ஏற்பவும் தாம் கற்ற நூல்களுக்கு ஏற்பவும் தமக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளுக்கு உரை வரைந்தனர் என்பதை நாம் நன்குணர்தல் வேண்டும். இந்த உண்மையை ஒவ்வொருவர் உரையும் தமக்கு அறிவுறுத்துகின்றது.
"ஐந்தவித்தான்" என்று தொடங்கும் குறளுக்கும் * "தென்புலத்தார்" என்று தொடங்கும் குறளுக்கும் பரிமே லழகர் வரைந்துள்ள உரையின் பொருந்தானமையே மேற் கூறிய உண்மையைப் புலப்படுத்துவதாகும். ஆதலின் திருக்குறளின் கருத்தை உள்ளவாறு அறிய விரும்புவோர் அவர் காலத்திலிருந்த சங்க நூல்களையும் சமய நூல்களை யும் பிற நூல்களையும் நன்கு பயின்ற பின்னரே உரையாசிரி யர்களின் உரைகளைப் படித்துக் குறளின் கருத்தைத் தெளிதல் நல்லது.
மேற்கூறப்பெற்ற உரைகளைத் தவிர இராமாதுச கவிராயர், கோ. வடிவேலுச்செட்டியார் முதலிய பெருமக்கள் எழுதிய உரைகளும் வெளிவந்துள்ளன. இக்காலத்தில் திருக்குறள் மிக்க ஏற்றம் பெற்றுள்ளது. யாண்டும் குறட்பாக்களும், குறட்கருத்துகளும் பேசப்படுகின்றன. இக்கால அறிஞர் சிலர் திருக்குறளுக்குத் தெளிவுரை எழுதியுள்ளனர். அவற்றுள் டாக்டர் மு. வரதராசனார் எழுதியுள்ள தெளிவுரை நூற்.
        த-11 -