பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


அவர்கள் தெளிவுற விளக்கி எழுதியிருத்தல் படித்து இன்புறத் தக்கது.[1]

வரலாற்றுப் பேராசிரியராகிய திரு. பி. டி. சீநிவாச அய்யங்கார், ‘உதியன் சேரல் பாரத வரலாற்றைக் கதகளி போன்ற நடிப்பு நாடகமாக நடத்தி அதன் இறுதியில் நடித்தவர்க்கும் பொதுமக்களுக்கும் பெருஞ்சோறு வழங்கி மிருத்தல் வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.[2] இக்கருத்துத் தவறு என்பதை மகாவித்துவான் அவர்கள் ‘தமிழ் வரலாறு’ என்னும் தமது நூலில் தக்க காரணம் காட்டி மறுத்துள்ளார்.[3]

உதியன் சேரலின் முன்னோன் ஒருவன் பெருஞ்சோறு கொடுத்த செயலை முடி நாகனார், பின்னோனாகிய உதியன் சேரல்மீது ஏற்றிக் கூறினார் என்று கூறுவாரும் உளர்.[4] இங்ஙனம் கருதுவதும் தவறு என்பதை மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்.[5] உதியன் சேரல் சேர மன்னருள் காலத்தால் மிகவும் முற்பட்டவன் என்பதை நினைவூட்டவே புறநானூற்றில் அவனைப் பற்றிய பாடல் கடவுள் வாழ்த்தை படுத்து முதற் பாடலாக வைக்கப்பெற்றுள்ளது போலும்! இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு


  1. தமிழ் வரலாறு, பக். 236-238
  2. History of the Tamils, pp. 491-494.
  3. பக். 233.
  4. K. A. N. Saatry, History of India, p. 113; History of s. India, p. 113; ‘முன்னோன் செய்த செயல்’ என்று இவரே ஒப்புக்கொள்வதால், பாரத காலத்தில் சேரர் இருந்தனர் என்பதை ஒப்புக்கொள்கிறார் என்பது இங்கு அறியத்தகும். எனவே, சேர, சோழ, பாண்டியர் பாரத காலத்துப் பழைமையுடையவர் என்பது கூறாமற் கூறிய வாறாகும்.
  5. தமிழ் வரலாறு, பக். 228-230.