பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

யர்க்கும் இருந்த நட்புறவை மெய்ப்பித்து, தென்னாட்டுப்

பாரதப் பிரதிகளில் கண்ட செய்திகள் இடைச் செருகல் என்று சிலராற் கூறப்படுவது எவ்வாற்றானும் பொருந்தா தென்பது கண்டுகொள்க' என்றும் கூறியுள்ளனர்.

மேலும் அப் பெரியார், தருமபுத்திரனைக் கோதமனார். பாடினார் எனவரும் செய்யுளைப் பற்றிப் பேசுகையில், இச்

செய்தியை மேற்குறித்த விஷயங்களோடு சேர்த்து நோக்கும்போது, அசுவமேத யாகம் போன்ற சந்தர்ப்பு மொன்றில், தமிழரசருடன் சென்ற தமிழ்ப் புலவர் ஒருவர் பாண்டவரின் முன் தோன்றலையே அவ்வாறு பாடினரோ

என்று சங்கிக்க இடந் தருகின்றது. அப் புறப்பாட்டில் அறவோர் மகனே எனத் தருமபுத்திரர் அக்கோதமனாரால் அழைக்கப்படுதலும், தலைச் சங்கத்தவர்களில் கோதமனார்

என்ற பெயருடைய புலவர் ஒருவர் காணப்படுதலும் இங்கு அறியத்தக்கன," என்று எழுதியிருத்தல் கவனிக்கத் தக்கது.

3. வான்மீகியார் (கி. மு. 600)

பாரத நிகழ்ச்சிகட்குப் பிற்பட்டது இராமாகாதை என்பது அறிஞர் கருத்து:" இராமகாதையை வடமொழியில் பாடியவர் வான்மீகியார் என்பவர். புறநானூற்றில் 358ஆம் பாடலைப் பாடியவர் வான்மீகியார் என்ற புலவர், அவர் இப்பாட்டில் துறவறத்தின் சிறப்பினைப் புகன்றுள்ளார். இராமாகாதை செய்த வான்மீகியாரும் இப் பாடலைப்பாடிய வான்மீகியாரும் ஒருவரே என்று "செந்தமிழ்’ இதழாசிரியராகிய பெரும்புலவர் திரு நாராயணையங்கார் ஏறத்தாழ எண்பது பக்கங்களில் விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார்.17 இம்முடிவு கொள்ளற்பாலதாயின், புறப்பாட்டிற் கண்ட

15. ஆராய்ச்சித் தொகுதி, பக் 70-78. 16. Dr. S. K. Ayyangar, Ancient India, pp. 1–5. 17. செந்தமிழ், 1939-40.