பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

கதைகளும், வடமொழி இலக்கண முறைகள் சிலவும் செல்வாக்குப் பெற்றன. "அருந்ததி அனைய கற்பு’ (442) என்பது வடநாட்டுக் கதைகளுள் ஒன்றாகும். அந்தாதி முறையிற் பாடுவதும் அவர் வழக்கேயாகும். அந்தாதி (அந்தம்-1ஆதி) என்ற தொடரே வடசொல் தொடராகும்,

இங்ஙனமே அவர் பயன்படுத்திவந்த வடசொற்களும் தமிழகத்தில் வழக்குப் பெற்றன; காலப்போக்கில் இலக் கியத்திலும் இடம் பெறலாயின. அவற்றுள் சில இந் நூலிலும் இடம் பெற்றுள்ளன. அவை அஞ்சனம்-மை (16), எந்திரம் (55), சிமையம்-உச்சி (100, 268), தவம் (11), அச்சிரம்-முன்பனி (223, 464, 470), தேசம் (317), பிரசம்-வண்டு (406) , கருவி, கற்பம் (461).

தேசம்’ என்ற வடசொல் தமிழில் தேயம் என முதலில் வழக்குப் பெற்றது; பின்பு தேஎம்' என மருவியது (317), .

பிற தொகை நூல்களில் உள்ள வடசொற்களையும் வட நாட்டுக் கதைகளையும் விட இந்நூலில் உள்ள வடசொற்களும் கதைகளும் மிகக் குறைந்த அளவின என்பது நினைவிற் கொள்ளத்தகும்.