பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


உத்திரையார், மதுரை நல்வெள்ளியார், வருமுலையாரித்தி, வெண்பூதி, வெண்மணிப்பூதி, வெள்ளிவீதி என்பவர் குறுந்தொகைப் பாடல்களுள் சிலவற்றைப் பாடிய பெண்பாற் புலவராவர். இவருட் சிலர் நெடுநில மன்னராலும், குறுநில மன்னராலும் பெரிதும் மதிக்கப் பெற்றவராவர்; சங்ககாலப் பெண் கல்வி எந்த அளவு உயர்ந்த நிலையில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை இப்பெருமாட்டிகளின் பாடல்களைக் கொண்டு இனிதின் அறியலாம்.

கபிலர், பரணர் போன்ற புலவர் பெருமக்களே நாட்டில் பலராவர். அவர்கள் போரசரையும் சிற்றரசரையும் வள்ளல்களையும் நாடிச் சென்று அவர்தம் ஆதரவு பெற்று நற்றமிழை நலமுற வளர்த்துவந்தனர்.

அரசர்: குட்டுவன் (34), பெரும்பூண் பொறையன் (89), திண்டேரிப் பொறையன் (128) எள்ற சேரமன்னர் இந்நூற் பாக்களில் குறிக்கப்பட்டுள்ளனர்; ' வளங்கெழு சோழர்' (116) குறிக்கப்பட்டுள்ளனர்; பசும்பூண் பாண்டி யன் (393) ஒருவன் குறிக்கப்பட்டுள்ளான்.

சிற்றரசர்: இன்ன சிற்றரசன் நாட்டைப்போன்ற அல்லது நகரம் போன்ற சிறப்புடையவள் தலைவி என்றும், களவைப் பற்றிய அலர் இன்ன அரசர்கள் போரிட்டு வெற்றி பெற்றபொழுது உண்டான. ஆரவாரத்தினும் மிகுதியாக இருந்தது என்றும் கூறப்பெற்ற சந்தர்ப்பங்களில் சிற்றரசர் பெயர்களும் ஊர்களும் பிறவும் இப் பாடல்களில் குறிக்கப் பெற்றுள்ளன. இங்ஙனம் குறிக்கப்பெற்ற சிற்றரசர் பெயர்களையும் அவர் தம் இயல்புகளையும் கீழே காண்க. கட்டி[1] என்பவனது நாட்டுக்கு அப்பால் வடுகர் வாழ்கின்றனர் (11). எவ்வி (19), நன்னன்-பெண்கொலை


  1. இம்மரபினர் கட்டிதேவன், கட்டியதேவன் எனப்பிற் காலச் சோழர் ஆட்சியில் சிற்றரசராய் இருந்த தெலுங்கராவர்.