பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார்  201

இதனால் நோன்பிருக்கும் வழக்கம் இருந்தது என்பது தெரிகிறது.

அணிகள் : சங்கு வளையல்களும் சங்கு மணிமாலைகளும் இருந்தன (11, 23). மகளிர் பொன்னால் செய்யப்பட்ட தலையணிகளை அணிந்திருந்தனர் (21); உருண்டையான பொற்காசுகள் கோக்கப்பட்ட காசுமாலைகளை அணிந்திருந்தனர் 67), நுண்பூண் (47), பூங்குழை (159), மின்னிழை (246), சேயிழை (281) , மாணிழை (348) என்னும் தொடர்கள் அக்கால அணிகள் பெற்றிருந்த வேலைப் பாட்டினை நன்கு உணர்த்துவனவாகும். பொன்னாலும் மணியாலும் இயற்றப்பட்ட மேகலை என்னும் அணியும் இருந்தது (264). செல்வச் சிறுவர் காலணி பொன்னால் இயன்றது; அது மலரும் பருவத்துக் கொன்றை அரும்பினை ஒத்த பொன்மணிகளைக் கொண்டது. பொன்னை உரைத்து அதன் மாற்றை அறிவதற்கு இருந்த கல் கட்டளைக்கல் எனப்பட்டது (192).

ஆரியக்கூத்தர் மூங்கிலில் கட்டிய கயிற்றின்மேல் நின்று ஆடினர். அப்போது பறை கொட்டப்பட்டது (7). கண்ணாடியுள் தோன்றும் பாவை (நமது உருவம்) ஆடிப் பாவை எனப்பட்டது (8). ஆலமரத்தடியில் ஊரவை கூடுதல் மரபு (15); சொல்வன்மை புலப்படப் பேசிய பாணன் 'இளமாணாக்கன்' எனப்பட்டான் (33) விழா நிகழ்ந்த ஊர் 'சாறு கொள் ஊர்' எனப்பட்டது (41) .

புத்தர் காலத்தில் சிறப்புற்ற பாடலிபுரம் பல நூற்றாண்டுகள் மகத நாட்டின் தலைநகராய்ப் பொலிவுற்றிருந்தது. அது சோணையென்னும் துணையாறு கங்கையைக் கூடும் இடத்தில் அமைந்திருந்தது. அத் தலைநகரத்து யானைகள் சோணையாற்றில் நீராட்டப்பட்டன என்றும், பாடலி செல்வச் சிறப்புடையது என்றும் படுமரத்து மோசி கீரனார் என்ற புலவர் பாடியுள்ளார் (75). வடநாட்டுச் செய்திகள் எந்த அளவு தமிழகத்தில் பரவியிருந்தன என்ப