பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


தற்கு இஃது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இஃது உள்\நாட்டு வாணிகத்தால் அறியப்பட்ட செய்தியாகும்.

பெண்கள் கூந்தலுக்கு எரு மண்ணையிட்டுப் பிலசவர் (113), மகளிர் கூந்தல் குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என்று அதன் பகுப்பைக் கொண்டு ஐவகைப் பட்டது (269). ஆண்களின் தலைமயிர் ‘ஓரி’ எனப் பெயர் பெற்றது (229).

நாழிகைக் கணக்கர் இரவில் உறங்காது காலக்கணக்கை ஆராய்ந்து அறிவித்து வந்தனர் (261). தலைவன் செல்வத்தை ஈட்டுவதையே முதற் கடமையாகக் கொண்டான் (331). பரம்பரையாக வந்த பெரிய செல்வர் ‘பெருமுது செல்வர்’ எனப்பட்டனர் (337).

பண்பாடு: அகப்பொருள் பற்றிய இந்நூற் பாடல்களில் பழந்தமிழர் பண்பாட்டை அறிவிக்கும் செய்திகள் பல கிடைக்கின்றன. அவற்றுள் சிலவற்றை ஈண்டுக் காண்போம்:

வினையே ஆடவர்க்கு உயிர்; மகளிர்க்கு ஆடவர் உயிர் (135). தன்பொருள் பலருக்கும் பயன்பட வேண்டும் என்னும் நல்லெண்ணம் கொண்டவன் ‘கடப்பாட்டாளன்’ எனப்பட்டான் (143). தாம் கண்டறிந்ததொன்றை மறைத்துப் பொய்க்கரி கூறும் இயல்பு அறிவால் அமைந்த பெரியோருக்கு இல்லை (184). திறமையுள்ளோர் செய்யும் செயல் அறத்தொடு பொருந்தியதாகும் (247). அறிவால் அமைந்த பெரியோர் தம்மைப் பிறர் புகழ்வதற்கு நாணுவர். அத்தகையோர் தம்மீது பிறர் கூறும் பழிச் சொல்லைப் பொறார் (252). நடுவு நிலைமையுடைய சான்றோரைக் காணும் மக்கள் அவர்களை எதிர்கொள்ளுதல் முதலிய கடமைகளைத் தவறாது செய்வர் (265). தம்முடைய முன்னோரால் தேடி வைக்கப்பெற்ற செல்வத்தைச் செலவழிப் போர் செல்வர் என்று சொல்லப்படார். தாமாக ஈட்டிய