பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

211

தமிழ்ப் புலவராய் விளங்கி நற்றமிழில் நன்கு பாடியுள்ளனர் என்பது மறக்கற்பாலதன்று.

அரசனால் காவிதிப் பட்டம் பெற்ற வணிகப் பெரு மக்களும், அறுவை வணிகர் போன்ற பலதுறை வணிகப் பெருமக்களும், சிறுபிள்ளைகளுக்குப் பாடம் கற்பிப்பவர் முதல் பலருக்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியன்மார்களும், குறத்தி முதலிய திணை நில மக்களும், கொல்லன் முதலிய பலவகைத் தொழிலாளரும் நல்லிசைப் புலவராய்த் திகழ்ந்தனர் என்பது இப் புலவர் பட்டியலைக் கொண்டு இனிதுணரப்படும். இங்ஙணம் மக்கள் இனத்தில் எவ்வித வேறுபாடும் இன்றி எல்லாத் தரத்தினரும் புலவர்களாய் விளங்கிய சங்க காலம் தமிழர் வரலாற்றில் பொற்காலம் என்று கூறுவதில் தடையுண்டோ?

இனி இந்நூலுள் கூறப்பட்டுள்ள செய்திகளைக் காண்போம்:

நூற்செய்திகள்

அரசரும் சிற்றரசரும் : குறுந்தொகைப் பாக்களில் குறிக்கப்பட்டாற் போலவே சேர சோழ பாண்டியர் தமக் குரிய பொதுப் பெயர்களால் நற்றிணைப் பாக்களில் குறிக்கப் பட்டுள்ளனர். ஆலங்கானத்துச் செழியன் (387) என்று நெடுஞ்செழியன் குறிக்கப்பட்டுள்ளான், சிற்றரசருள் ஒரி (6, 52, 265, 320) , பழையன் (10) , தித்தன் (58), அழிசி (87), மலையமான் (100, 170, 291), பெரியன் (131), ஆய் அண்டிரன் (167, 237), அன்னி (180), பாரி (253), விராஅன் (260, 350), நன்னன் (270, 391), மிஞரிலி (265) , தழும்பன் (300) , வாணன் (340), அருமன் (367), நெடுமானஞ்சி (381), முடியன் (390) என்பவர் குறிக்கப் பட்டுள்ளனர்.

அரசியல் : அரசர் தம் கடமையை அறிந்து நடப்பாராயின், அவரது ஆட்சி இன்பந்தரும் குளிர்ந்த நிழலைப்-