பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

213


தெளிந்த கள்ளைப் பருகுவர் (328); சில சமயங்களில் கடலிலேயே சுறா மீன்களையும் வேறு பெரிய மீன்களையும் தம் திமிலிலேயே துண்டித்து இறைச்சிகளை நிரப்பிக்கொண்டு கரைக்கு வருவர் (112).

ஊர்கள் : இந்நூற் பாடல்களில் கீழ்வரும் ஊர்கள் குறிக்கப்பட்டுள்ளன! தொண்டி - சோனுக்குரிய துறைமுக நகரம் {8, 195), போர் - பழையன் என்ற சிற்றரசனுக்கு உரியது (10), கொற்கை - பாண்டியர் துறைமுக நகரம் (23), மாந்தை - சேர நாட்டுக் கடற்கரை ஊர் (35, 395), காண்ட வாயில் - கடற்கரை ஊர், கூடல் - பாண்டியர் தலைநகரம் (39, 298) , கிடங்கில் (65), சாய்க்காடு(73), பொறையாறு (131). அம்பர் (141) , ஆர்க்காடு (190), மருங்கூர்ப்பட்டினம் - பாண்டிய நாட்டுக் கடற்கரை நகரம் (358), புனல்வாயில் (260), இருப்பையூர் (260), பாரம் (265), ஆறேறு (265), குன்றூர் (280}, கழாஅர் (281), முள்ளூர் (291), ஊனூர் (300), வாணன் சிறுகுடி (340), அருமன் சிறுகுடி (357), குடந்தைவாயில்[1] (379), வெண்ணி (390).

உடை : கலிங்கம், பூங்கலிங்கம், துகில், நுண்துகில், அம்துகில் என்பன உயர்ந்த மெல்லிய ஆடை வகைகள் (20, 90, 43, 120, 366). பாலை நிலத்து ஆடவர் துவர் ஆடையை உடுத்திருந்தனர் (33). வீரர் இடையில் கச்சு அணிந்தனர் (21), கானவர் (குறிஞ்சி நிலத்து ஆடவர்) மரப்பட்டை நாரால் பின்னிய உடையை உடுத்திருந்தனர் (64). அவர்தம் மகளிர் தளிர்களையும் பூங்கொத்துகளையும் நெருக்கமாக வைத்துக் கட்டப்பெற்ற தழைகளை ஆடையாக உடுத்திருந்தனர் (204) . நாரை பிறகின் மென்மையும் வெண்மையும் வாய்ந்த ஆடைகளும் வழக்கில் இருந்தன (70).


  1. இப்பொழுது தஞ்சை மாவட்டத்தில் ‘குடவாசல்’ - என்பது இப்பழைய ஊரே போலும்!