பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 227


வரலாற்றுச் செய்திகள் கந்தர்கள் (கி.மு.425- கி.மு.823)

அகநானூறு 265ஆம் பாடலில் நந்தர்களைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது.

"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழிஇக் கங்கை நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ" 251ஆம் பாடலில் இரண்டு வரிகள் காணப்படுகின்றன.

நந்தன் வெறுக்கை யெய்தினும் மற்றவண் தங்கலர் வாழி தோழி. இவ்விரண்டு குறிப்புகளும் மாமூலனார் என்ற புலவர் பெருமானால் தரப்பெற்றுள்ளன. கந்தர் மகதநாட்டை ஆண்டவர். அவர்கள் தலைநகரம் பாடலிபுத்திரம். அவர்கள் செல்வத்தில் சிறந்தவர்கள். அவர்கள் அச் செல்வத்தைக் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்திருந்தனர். இச்செய்தியை இவ்விரண்டு பாக்களின் அடிகளும் குறிக்கின்றன. மோரியர் படையெடுப்பு கி.மு.301- கி.மு. 278)

அகநானூற்றுச் செய்யுட்கள் மூன்றில் (69, 281, 375) மோரியர் (அவர்க்குத் துணையாக வந்த வடுகர்) படையெடுப்புத் தமிழகத்தில் நிகழ்ந்தமை குறிக்கப்பட்டுள்ளது. புறநானூற்றிலும் இது பற்றிய செய்திகள் காணப்படுகின்றன? இப்படையெடுப்புச் சந்திரகுப்த மோரியன் மகனான பிந்துசாரன் காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர் கூறுகின்றனர்.

2 இந்நூலாசிரியர் எழுதியுள்ள 'எல்லோரும் வாழ வேண்டும்' என்னும் நூலில் இதுபற்றி விரிவான கட்டுரையைக் காண்க.

3. Dr.S.K Ayyangar—Beginnings of S.1. History.