பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

229


ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, குன்றுறை, பழையன், கணையன் (44, 186, 326) , அன்னி (45), பண்ணன் (54, 177), புல்லி (61), வேள் ஆய் (69), அகுதை (76), பிட்டன் (77, 143), பாரி (78), கொங்கர் (79), கடலன் (81) , நன்னன் வேண்மான் (97), பெரியன் (100), பாணன் (Banan) (113, 226, 325), வேள் எவ்வி (115), அஞ்சி (115) , கழுவுள் (135), ஆய் எயினன் (148), தித்தன் வெளியன், பிண்டன், நள்ளி, ஆய் (152) . மிஞிலி (181) , ஆதன் எழினி (216), வழுதுணைத் தழும்பன் (227), முசுண்டை (249). (வடுகர் பெருமகன்) எருமை (253), பேகன் (263), (நீடூர் கிழவன்) எவ்வி (266), அவியன் (271), பாரி (393), அதியன் (325).

பேரரசர் பேரரசருடன் போரிட்டபோது அவரவரைச் சேர்ந்த சிற்றரசரும் தத்தம் பேரரசர் சார்பில் நின்று போரிட்டனர் (36), சிற்றரசர் ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட்டனர்; பலர் சேர்ந்து சிலரை எதிர்த்தனர்; சிலர் சேர்ந்து பலரை எதிர்த்தனர்; பலர் சேர்ந்து ஒருவனை எதிர்த்தனர். இத்தகைய விவரங்கள் இந்நூற் பாடல்களில் கூறப்பட்டுள்ளன.

பாணர்கள் : பாணர்கள் (Banas) நான்கு பாடல்களில் (113, 226, 325, 386) குறிக்கப்பெற்றுள்ளனர். தமிழகத்திற்கு வடக்கில் அவர்தம் நாடு இருந்தது. அவர்கள் ஆண்ட நாடு, கிழக்கில் கர்நூல் மாவட்டத்திலுள்ள திருப்பருப்பதம் மலைகள் வரையிலுள்ள நிலப்பகுதியையும், தென்கிழக்கில் சித்தூர் (சிற்றூர்) மாவட்டத்தின் மேற்குப் பகுதி வரையிலுள்ள நிலப் பகுதியையும், மேற்கே கோலார் மாவட்டத்தையும் தன்னகத்தே கொண்டது. தொடக்கத்தில் அவர்கள் ஆட்சி யிலிருந்த நிலப்பகுதி அடர்ந்த காடுகளாகவும் பாறைகள் நிறைந்த பகுதியாகவும் இருந்தது. பின்பு காலப் போக்கில்

4. Dr. Mahalingam, The Banas in S. l. History, pp. 155–156.