பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

அவர்கள் நாடு வட ஆர்க்காடு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியும் சித்தூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியும் சேர்ந்த நிலப்பரப்பாயிற்று.அப்பகுதி பெரும்பாணப்பாடி என்று பிற்காலக் கல்வெட்டுக்களில் பெயர் பெற்றது.

மணிமேகலை என்னும் தமிழ்க் காவியம்-நெடுமுடிக் கிள்ளி என்ற சோழவேந்தன் பாண அரசர் மகளான சீர்த்தி என்பவளை மணந்துகொண்டான் என்றும், அவள் உதய குமரனுக்குத் தாயென்றும் கூறுகிறது. இதனால் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே பாண அரசர் கள் சோழர்க்குப் பெண் தரும் தகுதி பெற்றிருந்தமை தெளிவாகும்.

கங்கர் : கங்கர் சங்க காலத்திலேயே வாழ்ந்த அரச மரபினர் (44, 188) . அவர் மரபினரே பிற்காலத்தில் தழைக் காட்டைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர் என்று கூறலாம்.

திரையர் : திரையர் தொண்டை மண்டலத்தை ஆண்ட வர். அவர் தலைநகரம் பவத்திரி (340), தொண்டை நாட்டின் தென்பகுதியைக் காஞ்சியிலிருந்து இளந்திரையன் ஆண்டுவந்தான்.

ஊராட்சி : சங்க காலத்தில் தேர்தல் முறையால் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டனர் (77) . ஊராட்சி மன்றத்தார் ஊர் வழக்கு களை விசாரித்து நீதி வழங்கினர். (256).

சிறப்புச் செய்திகள் : தமிழரசர் ஆட்சியில் ஒற்றர் இருந் தனர் (318); தூதர் இருந்தனர் (337). அரசாங்க வரு வாய் குறிப்பிட்ட ஊரில் வைத்துப் பாதுகாக்கப்பட்டது. சோழ நாட்டு வருவாய் குடந்தையில் வைத்துப் பாதுகாக்கப் பட்டது (60), சோழரது தலைநகரான உறையூரிலிருந்த அறங் கூறு அவையம், முறை வழங்குவதில் பெயர் பெற்றது (93).

5.Ibld,p.156