பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

முற்றும் தமிழர்க்கே உரிய திருமண முறைகளாகும்,"என்று வரலாற்றுப் பேராசிரியர் திரு. பி. டி. சீநிவாச அய்யங்கார் கூறியுள்ளது காண்க.

சமயச் செய்திகள் : கூடலை யடுத்த திருப்பரங்குன் றத்தில் முருகன் திருக்கோயில் இருந்தது (59). அங்கு ஒய் வில்லாமல் விழாக்கள் நடந்தபடி இருந்தன (149). அலை வாய் என்பது கடற்கரை ஊர். அங்கு அழகிய மணி விளக்கு ஒன்று ஒளி தந்துகொண்டிருந்தது. அங்கும் முருகன் கோவில் இருந்தது (266). மதுரையில் மலையை ஒத்த உயர்ந்த கோவில் இருந்தது (290) . சிவனும் திருமாலும் 'இருபெருந் தெய்வங்கள்' என்று போற்றப்பட்டனர் (360) . ஒவ்வோர் ஊரிலும் அக்காலத்தில் பொதியில் (அம்பலம்) இருந்தது. அதனில் கந்து என்னும் வழிபாட்டுக்குரிய மரத்தூண் (இலிங்கவடிவில் அமைந்தது) இருந்தது. ஊர் மக்கள் விடியற்காலத்தில் அதனை வழிபட்டனர் (287) .

சங்ககாலத் தமிழர் தம் பிள்ளைகளுக்குத் தாலி அணி வித்தல் வழக்கம். அத்தாலி, காத்தற் கடவுளான திருமாலின் ஐந்து படைகளின் உருவங்களும் பொறிக்கப் பெற்றிருந்தது. அது ஐம்படைத் தாலி’ எனவும் பெயர் பெற்றது. அதனை ஆண் மகனும் பெண் மகளும் அணிந்திருந்தனர் (54) .

உயர்ந்த மலைகள் மீது கார்த்திகை விழாவிற்கு விளக்கு களை இடுதல் சங்ககால வழக்கம் என்று பாலைபாடிய பெருங்கடுங்கோ என்ற சேரமன்னன் கூறியுள்ளான். சேர நாடு மலைநாடு. இன்று திருவண்ணாமலை உச்சியில் இடப்

6. It will be noticed that in this ancient Tamil rite ef Marriage there is absolutely nothing Aryan, no lighting of fire, no circumambulation of fire and no priest to receive dakishna...These two poems belong to a later period than we are considering, but certainly describe the wedding rites which prevailed in very old times.—History of the Tamils, pp. 80–81. .