பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

247


 ஆயர் தம் வீட்டைச் செம்மண்ணால் அலங்கரித்துத் தரையில் மணலைப் பரப்புவர்; பெண் எருமையின் கொம் பைத் தெய்வமாக வைத்து வழிபட்டுத் திருமணம் செய்வர். அத்திருமணம் 'பெருமணம்'எனப்படும் (113).
 தமிழ்ச் சங்கம்: இளவேனிற் காலத்தில் சான்றோர் நாவிற் பிறந்த கவிகளின் புதுமையை மதுரை மக்கள் கொண்டாடுவர் என்று ஒரு செய்யுள் (35) கூறுகிறது. இதனை நோக்க, இளவேனில் என்னும் இன்பந்தரும் காலத்தில்தான் புலவர்கள் புதிய செய்யுட்களை இயற்றிக் கொண்டு மதுரையில் கூடினர் என்று நினைப்பது பொருத்தமாகும.
 வையையாறு மதுரையைச் சூழ்ந்து வந்தது. அத்தோற்றம் நிலமகள் ஒரு பூமாலையைச் சூடியிருந்த தன்மையை ஒத்திருந்தது. கார்காலம் முதிர்ந்தமையால் கொத்துக் கொத்தாக மலர்கள் வையை நீரில் படிந்து வத்தன. வையை நீர் கோட்டை மதில் மீது மோதிக் கொண்டிருந்தது. அவ் வையை புலவரால் பாராட்டப்பட்டது (67). புலவர்கள் தம் செவிகளை வயலாகவும் தமக்கு முற்பட்ட சான்றோர் கூறிய செய்யுட்கள் தம் சொல்லை வளர்க்கும் நீராகவும் கொண்டு, தமது அறிவுடைய நாவாகிய கலப்பையால் உழுது உண்பவர். அத்தகைய புலவர் பெருமக்களின் புதிய கவிகளைப் பாண்டியன் கொள்ளைகொண்டு மகிழும் இயல்புடையவன் (68} . இக் கூற்றுகளை நோக்க, மதுரையில் புலவர்கள் மிக்கிருந்தமையும் பாண்டியர் அவர் செய்யுட்களைக் கேட்டு அநுபவித்தமையும் அப்புலவர் பெருமக்கள் புதிய கவிகள் இயற்றினமையும் இனிது புலப்படுகின்றன அல்லவா? -
 குறிஞ்சி நிலத் தலைவன் தன்னை நாடி வந்த புலவர்களுக்குத் தேர்களையும் களிறுகளையும் கொடுத்தான் என்று ஒரு செய்யுள் கூறுகிறது (50) . கலித்தொகைப் பாக்கள் சில: பாண்டியனையே தலைவனாகக் கொண்டு பாடப்பட்டிருப்ப