பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


இனிக் கண்ணன் ஆடிய குடக்கூத்தும், அவன் மகனான பிரத்தியும்.நன் ஆடிய பேடு என்னும் கூத்தும், . கண்ணன் மல்லன் வேடம் பூண்டு வாணனைக் கொன்றாடிய மல்லாடல் கூத்தும், அல்லியத் தொகுதி என்ற கூத்தும் சிலப்பதிகாரம்-அரங்கேற்று காதையில் இடம் பெற்றுள. சிலப்பதிகார காலத்திற்கு முன்னரே இக்கதைகள் தமிழகத்தில் வழக்குப் பெற்றுவிட்டன என்பதையே இவை உணர்த்துகின்றன. இவை போன்ற சிலவே பரிபாடலில் திருமால் பற்றிக்கூறும் இடங்களில் இடம் பெற்றுள்ளன. எனவே, இவை கொண்டு நூலின் காலம் காணல் அருமை யிலும் அருமை! -

பரிபாடல்களுள் பல, திருமால் முருகன் ஆகிய கடவுளரைப் பற்றியவை. ஆதலால், அக்கடவுளரைப்பற்றி வட மொழிப் புராணங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. கங்க மரபினர் காலத்தில் கி. மு. இரண்டாம் நூற்றாண்டில்-வட இந்தியாவில் தோன்றிய பக்திநெறி தமிழகத்திலும் நன்கு பரவிவிட்ட காரணத்தாலும், கடவுளர்பற்றிய செய்திகள் வடமொழி நூல்களிலேயே மிகுதியாக இடம் பெற்றிருந்த காரணத்தாலும் கடவுளர் பற்றிய பரிபாடல்களில் வடமொழிச் சொற்களும் புராணக் கதைகளும் ஓரளவு மிகுதியாக இடம் பெற்றிருத்தல் இயல்புதானே! இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை பெளத்த சமயத்தைப் பற்றியே பேச எழுந்தது. ஆதலால் அதன்கண் வடமொழிச் சொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவ்வொரு காரணம் பற்றியே மணி மேகலை சிலப்பதிகார காலத்திற்குப் பிற்பட்டது என்று கூறுவது பொருந்தாது அன்றோ?

3. சிலப்பதிகாரத்தின் காலம் கயவாகுவின் காலமாகிய கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி (கி.பி. 113-136) என்பது முன்பு பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வேங்கடம், திருவரங்கம், அழகர்மலை ஆகிய மூன்றும் திருமாலுக்கு உரியனவாகக்