பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.மா.இராசமாணிக்கனாரின்

271

அம்மன் பொருட்டு நிகழ்த்தப்பெறும் நீராட்டு என்று பொருள்படும். அம்பா, அம்பாள் என்பது அம்மனைக் குறிப்பவை.[1]

அடியார் வேண்டுதல் : அடியவர், 'நாங்கள் எங்கள் சுற்றத்தாருடன் நின் திருவடிகளைத் தொழுது வாழ அருள் புரிவாயாக (1) , யாம் மெய்யுணர்வு பெற்ற நின்னை வணங்க அருள்புரிவாய் 12 இந்த இருங்குன்றத்தின் அடியின்கண் வாழும் பேறு எங்களுக்குக் கிடைப்பதாகுக, ' 5) என்று திருமாலை வேண்டினர். -

அடியார் சிலர், "யாம் வேண்டுபவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல. எமக்கு வீடு பயக்கும் நின் அருளும், அதனை உண்டாக்க நின்னிடத்து யாம் செய்யும் அன்பும், அவ்விரண்டாலும் வரும் அறமும் ஆகிய இம் மூன்றுமேயாகும் (5) , நின் திருப்பரங்குன்றத்தில் யாம் வாழுதல் நாள்தோறும் பொலிந்து பயன்தருவதோடு சிறக்கும்படி நின் அருளை வேண்டுகிறோம் (9) , பிறவித் துன்பம் எம்மைவிட்டு நீங்குக என்று நின் புகழை ஏத்திப் பாடுவோம் [17] , யாம் எமது சுற்றத்துடன் கூடி நின் அடிக்கண் வாழுதல் இன்றுபோல் என்றும் பொருந்துக. [21] என்று முருகனை வேண்டினர்.

பிரிந்த தலைவர் வினைமுடித்து விரைவில் வந்துதம்மைக் கூடவேண்டும் என்பதற்குத் தலைவியர் திருப்பரங்குன்றத்தில் விழா இயற்றினர்; பின்பு வையைக் கரையிலும் வழிபாடு செய்தனர்; பின்பு கூடலில் விருந்து நடத்தினர் (17, வரி 42-46) ,

ஓவியம் : ஒவியம் எழுதுவோன் வல்லோன் (21 வரி 27-28) எனப்பட்டான். தண்பரங்குன்றத்து மலைமீதிருந்த முருகன் திருக்கோவில் மண்டபத்தில் பல ஒவியங்கள் வரையப்பட்டிருந்தன. அவற்றுள், நாள் மீன்களையும் தாரகைகளை


  1. 20, பேராசிரியர் மு. இராகவையங்கார். ஆராய்ச்சித் தொகுதி, பக். 194-195.