பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

வடசொற்கள் : இந்நூலில் பல வட சொற்கள் ஆளம் பட்டுள்ளன. அவற்றுள் குறிக்கத்தக்கவை கீழ்வருவனஆகும். இவற்றுள்ளும் பல புதியவை.

நேமி (1), கமலம், நித்திலம், மதாணி, ஆசான் (2): பிருங்கலாதன் (4): மாதவர், பதுமம், குணம், போகம் (5): கவிதை, ஆராதனை சாரிகை, சலதாரி, காமன் (6) மேகலை, வாகுவலயம், சிரம் (7): காரணம், தமனியம், குடாரி, அருச்சித்தல், அமிர்தபானம் (8); நயனம், தடாகம் (9); சனம், சரணத்தார், அத்திரி, தண்டம், திசை, சலம் (10); மிதுனம், மகரம், சையம், நதி, கன்னி, அம்பா (11); அரவிந்தம், மத்தகம், முஞ்சம், கங்கை (16): சுருதி (18); ரதி, காமன், இந்திரன், அகலிகை, கவுதமன், சோபனம் (19); கணிகை, சிந்திக்க, வந்திக்க, வச்சிய-வசீகரித், தலையுடைய (20); சருமம், மண்டிலம் (21).

வடமொழிப்பெயர் மொழி பெயர்ப்பு : (1 கண்ணன் குதிரை உருவத்தில் வந்து போரிட்ட கேசி என்னும் அசுரனைக் கொன்றான். இப்பெயர் கேசம்" என்னும் வடமொழி முதல் நிலையாக முடிந்தமையின் அதன் பொருள் பற்றிக் கடுவன் இள எயினனார் என்ற புலவர். கூந்தல் என்னும் பெயரோடு கூந்தல்'" (3, வரி 31) என்றார்.

(2) அவரே மேருமலையை அப்பெயரால் குறியாது. நடுவண் ஓங்கிய பலர் புகழ் குன்று' (4-24) என்று மாற்றிக் கூறியுள்ளார்.

(3) கற்பிற் சிறந்தவளும் தெய்வத்தன்மை பொருந்திய வளுமாகிய அருந்ததியை அவ்வாசிரியரே, கடவுள் ஒரு மீன் சாலினி ' (5-44) என்று குறித்துள்ளார்,

(4) ஆசிரியன் நல்லந்துவனார் என்ற புலவர் பல விண் மீன்களின் பெயர்களைத் தமிழில் மாற்றியுள்ளார்: கார்த்திகை-எரி, திருவாதிரை-சடை, பரணி-வேழம், இராசிஇருக்கை (11, வரி 1-3).