பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.மா.இராசமாணிக்கனாரின்

277


வின் காலத்தில் வாழ்ந்தவன் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது கயவாகுவின் காலம் கி. பி. 118-136 என்று இலங்கை வரலாறு இயம்புகின்றது என்பது முன்பே கூறப்பட்டதன்றோ? செங்குட்டுவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் அரசாண்டான் என்று பதிகம் பகர்கின்றது. செங்குட்டுவன் தனது ஆட்சிக் காலத்தின் இறுதியில் வடநாட்டு யாத்திரையை மேற்கொண்டான். எனவே, அவனது ஆட்சிக் காலம் ஏறத்தாழக் கி. பி. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியும் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியுமாகும் எனக்கருதுதல் பொருத்தமாகும். அவனுக்கு முற்பட வாழ்ந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி. பி. முதல் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்தவனாதல் வேண்டும் , பத்துகளின் வைப்பு முறையைக் கொண்டு, பிற்பட்ட பத்துகளுக்குரிய சேர மன்னர் செங்குட்டுவனுக்குப் பிற்பட்டவர் எனக்கொள்ளலாம். இங்ங்ணம் கொள்ளின், பதிற்றுப்பத்தில் பாடப்பெற்ற சேரவேந்தர்களின் காலம் ஏறத்தாழக் கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுகளுள் அடங்கும் என்று கூறலாம்.

பதிகங்கள் ; ஒவ்வொரு பத்தின் ஈற்றிலும் உள்ள பதிகம் அதற்குரிய மன்னவன் இன்னவன், அவன் போர்ச் செயல்கள் இவை, அவன் கொடைத்திறம் இன்னது, பாடிய புலவர் இவர், இவர் பெற்ற பரிசில் இன்னவை என்பவற்றை விளக்கி நிற்கின்றது. இப்பதிகத்தையும் இதன் கீழ்வரும் உரை நடையையும் பிற்காலத்தார் எழுதி முடித்தனர் என்பது இதன் அமைப்பைக் கொண்டே கூறலாம்.

பாடல்கள் : ஒவ்வொரு பத்திலும் உள்ள ஒவ்வொரு பாட்டுக்கும் அப்பாட்டில் காணப்படும் பொருள்நயம் பொருந்திய அருந்தொடரே தலைப்பாக இடப்பட்டுள்ளது. இம்முறை, வேறு எச்சங்க நூலிலும் இல்லை. இதனில் நான்காம் பத்து அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனாராவர் , அந்தாதித் தொடையில் செய்யுட்களைப் பாடுவது லேயே