பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


லேயே வழக்கில் இருந்தது என்பது இதனால் தெரிகிறதன்றோ?

இந்நூற் பாடல்களில் சேரநாட்டு வளமும் சேரவேந்தர் போர்ச் செயல்களும் அவர்தம் கொடைச் சிறப்பும். சேரமா தேவியரின் இயல்புகளும், சேரநாட்டு மக்களின் பழக்க வழக்கங்களும் பிறவும் கூறப்பட்டுள்ளன.

ஒவ்வொரு செய்யுளுக்கும் வண்ணமும் தூக்கும் அமைந்துள்ளன. எனவே, இப்பாக்கள் பரிபாடல் பாக்களைப்போல இசையோடு பயிலப்பட்டவை என்பது அறியப்படும்.

உரை : பதிற்றுப்பத்துக்குப் பழைய உரை உண்டு. அதனை இயற்றிய ஆசிரியர் பெயரும் காலமும் தெரியவில்லை. இவ்வுரையாசிரியர் இந் நூலிலுள்ள அருஞ்சொற்களுக்கும் தொடர்களுக்கும் பொருள் கூறியுள்ளார்; ஒவ்வொரு பாடலுக்கு உரிய துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பனவற்றின் அமைதியைப் புலப்படுத்தியுள்ளார். ஆங்காங்கு இலக்கணக் குறிப்புகளைத் தந்துள்ளார்; ஒவ்வொரு பதிகத்தின் ஈற்றிலும் அதுபற்றிய விளக்கம் தந்துள்ளார். .

இந்நூலை முதலிற் பதிப்பித்த பெருமை டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கட்கு உரியது. பின்பு பேராசிரியர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் விளக்கவுரைப் பதிப்பு ஒன்று சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக வெளிவந்துள்ளது. இது மிகவும் பாராட்டத்தகும் முறையில் பதவுரையும் விளக்சுவுரையும் பெற்றுள்ளது. .

நூற் செய்திகள்

சேரர் வீரம் : பதிற்றுப்பத்துப் புறப்பொருள் பற்றிய நூல். ஆயின் இதன்கண் சேரவேந்தர் போர்ச் செயல்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. கடற் கொள்ளைக்காரரான