பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

வாழ்த்து முறை : புலவர் பெருமக்கள் மன்னர்களைப் பலவாறு வாழ்த்தினர். நீ உன் முன்னோரைப் போலப் புகழை நிறுவி வாழ்வாயாக' (14), உலகத்தார் நலனுக்காக நீ வாழ்வாயாக’ (15), உன்னைப் பெற்ற உன் தாயின் வயிறு வாழ்வதாகுக' (20) , நீ நின் மனைவியோடு ஆயிரம் வெள்ளம் காலம் வாழ்க’’ (21) , ' நின் வளம் வாழ்வதாகுக (24), நின் வலிமை கெடாது நிலை பெறுவதாகுக, நினது பெருவளம் நீடு வாழ்வதாகுக' (36) , 'உலக மக்கள் ஆக்கத்தின் பொருட்டு நின் வாழ்க்கையும் வளனும் வாழ்க’’ (37) , நீ காஞ்சியம் பெருந்துறை மணலினும் பல வாழ் நாட்களைப் பெற்று வாழ்க' (48) . வாழ்க நின் கண்ணி; மிகச் சிறிது காலமேனும் துறக்க உலகுக்குச் செல்லாமல் இவ்வரச வாழ்க்கையிலேயே நிலை பெற்று நின்று நெடுங்காலம் வாழ்வாயாக’ (54) , ' நின் வாழ்நாள் சென்று கெடாது ஒழிவதாகுக (55) , ஆம்பல் என்னும் எண்ணும் பல ஆயிரங்களாகப் பெருகிய வெள்ளம் என்னும் எண்ணும் ஆகிய ஊழிகள் நீ வாழ்வாயாக’’ (63), 'அயிரை என்னும் நெடிய மலையைப்போல நீ வாழும் நாள் குறையாது பெருகுவதாகுக' (70, 79), "நீ ஞாயிறு. போலப் பல நாள் விளங்குவாயாக’ (88), "நீ அருந்ததி போலும் கற்புடைய நின் மனைவியுடன் அழகுற விளங்கி நோயற்று வாழ்வாயாக’ (89) , உலக மக்கள் கூறும் திங்கள், யாண்டு, ஊழி, வெள்ளம் என்பவை முறையே. நின் வாழ்நாளின் நாள், திங்கள், யாண்டு, ஊழி என்பன வாக நீடுக (90}.

சேர வேந்தரை இங்ங்ணம் வாழ்த்தப் புலவர் பெரு மக்கள் உள்ளம் எந்த அளவு குளிர்ந்திருத்தல் வேண்டும். என்பது இங்கு நினைக்கத் தகும். -

மேற்கோள் : பிற அகப்பொருள் தொகை நூல்களில் திருக்குறள், புறநானூறு பத்துப் பாட்டுக் கருத்துகளும், சொற்களும், சொற்றொடர்களும் இருத்தல் போலவே,