பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

தமிழமொழி - இலக்கிய வரலாறு


146. வடமோதங்கிழார்
147. வன்பரணர்
148. வால்மீகியார்
149. விரிச்சியூர் நன்னாகனார்
150. விரியூர் நக்கனார்
151. வீரை வெளியனார்
152. வெண்ணிக் குயத்தியார்

153. வெள்வௌருக்கிலையார்
154. வெள்ளைக்குடி நாகனார்
155. வெள்ளைமாளர்
156. வெறிபாடிய காமக் கண்ணியார்
157. வேம்பற்றூர்க் குமரனார்


பேரரசரும் சிற்றரசரும் :' புறநானூற்றில் சேர மன்னர் பதினெண்மரும் சோழ மன்னர் இருபதின்மரும் பாண்டியர் பதின்மூவரும் சிற்றரசர் ஐம்பத்திருவரும் பிற தலைவர் பன்னிருவரும் குறிக்கப்பட்டுள்ளனர். இவர் அனைவரும் தமிழ்ப் புலவர்களைப் போற்றிப் பாதுகாத்தவராவர். சங்க காலத்தில் தமிழ் வளம்பெறக் காரணமாயிருந்த இப்பெரு மக்கட்கு நமது நன்றியும் வணக்கமும் உரியவாகும்.

புறநானூற்றுச் செய்திகள்

ஆட்சிச் சிறப்பு: மன்னன் தன் ஆட்சிக்குட்பட்ட குறிஞ்சி முதலிய எல்லா நிலங்களிலும் காவல் வீரரை வைத்திருந்தான் (3). ஒவ்வோர் ஊரிலும் ஊரைக் காப்பவர் இருந்தனர். அவர்கள் இரவில் விளக்கேற்றிச் சென்று ஊரைக் காவல் காத்தனர் (37), குடிகள் கண்ணிர் சிந்தி, 'எம் மரசன் கொடுங்கோலன்' என்று வருந்திக் கூறும்படி நடத்தலாகாது என்று தமிழ் மன்னர் கவலை கொண்டனர் (72), முறை தவறி அறம் உரைக்கும் மக்கள் அறங்கூறவையத்தில் இருத்தலாகாது என்று கவலை கொண்டனர். குடி மக்களைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள அரசமரபில் பிறத்தலைச் சிறப்பாகக் கருதினர் (71); நல்லவரை ஆதரித்தனர்; கொடியவரைத் தண்டித்தனர் (29), சோழர் தலைநகரான உறையூரிலிருந்த அறங்கூறவையம் அறநெறி தவறாதது (39)