பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

297

டாக்டர்.மா.இராசமாணிக்கனார்


ஒளவையார் அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் நிகழவிருந்த போரைத் தாமே அரசியல் தூதராகச் சென்று தவிர்த்தார் (95) . பெருந்தலைச் சாத்தனார் தன் தமையனைக் கொல்ல விரும்பிய இளங்குமணன் உள்ளத்தைத் தம் சிறந்த உரையால் மாற்றினார் (165). முடமோசியார் சேரனுக்கும் சோழனுக்கும் நிகழ இருந்த போரைத் தமது பேச்சாற்றலால் தவிர்த்தார் (13}. . .

பிசிராங்தையார் பாண்டியன் அறிவுடை நம்பியிடம் சென்று, குடிகளை வருத்தாது சிறுகச் சிறுக வரி வாங்க வேண்டும் என்பதை அவன் உள்ளத்தில் நன்கு பதியும்படி அறிவுறுத்தினார் (184). வெள்ளைக் குடி நாகனார் என்ற புலவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனுக்குத் தக்க வாறு அறிவுரை கூறி, நிலத்திற்கு விதிக்கப்பட்டிருந்த பழைய வரியை நீக்கினார் (85) . -

சிற்றரசர் : தமிழகத்துச் சிற்றரசருட்பலர் மூவேந்தர்' ஆட்சிக்கு உட்பட்டவர். அவர் அனைவரும் முத்தமிழ் வாணரைப் போற்றினர். அவருள் பறம்பு நாட்டையாண்ட பாரி, பழநிமலை நாட்டை ஆண்ட பேகன், கொல்லிமலை நாட்டை யாண்ட ஒரி, மலையமானாட்டை யாண்ட காரி பொதிய மலைநாட்டை ஆண்ட ஆய், தகடூர் நாட்டை ஆண்ட அதிகன், நள்ளி என்னும் எழுவரும் குறிக்கத் தக்கவர். புலவர் பலர் இவ்வள்ளல்களின் உயிர் நண்பர்களாய் இருந்தனர் என்று புறநானூற்றுப் பாடல்கள் புகல்" கின்றன. . - - -

ஊர்த்தலைவர்களும், சிறந்த வீரர்களும், பெருஞ் செல்வரும் முத்தமிழ் வாணரை ஆதரித்துவந்தனர் என்பதைச் செய்யுட்கள் பல (318-897) உணர்த்துகின்றன. இத் தலைவர்கள் போலவே இவர்தம் வாழ்வரசிகளும் முத்தமிழ் வாணரை உபசரித்துப் பெருமை பெற்றனர் என்பதைப் புலவர் பாக்களே புகழ்ந்துரைக்கின்றன.