பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

ஏவலரும் அத்தகையவரே; (3) எனது நாட்டு மன்னன் செங்கோலினன்: (4) இவை அனைத்திற்கும் மேலாக, எனது ஊரில் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் வாழ்கின்றனர்" (191).

ஒவ்வொருவரும் இந்நான்கு காரணங்களையும் எண்ணிப் பார்த்தல் இன்றியமையாதது. மனிதன் நடமாடும் இடங்கள் மூன்று. அவை வீடு, ஊர், நாடு என்பன. வீட்டில் உள்ள அனைவரும் உயர்ந்த பண்பு நலன் வாய்க்கப் பெற்றி ருப்பின் அவ்வீட்டில் இன்பம் ஒன்றே நிறைந்திருக்கும். இங்ஙனமே ஊரில் கல்வி, கேள்வி ஒழுக்கங்களாற் சிறந்த பெரியோர் பலர் இருப்பின் அவ்வூர் செம்மை சான்ற சூழ் நிலையில் அமைந்திருக்கும். அரசன் செங்கோலினனாயின் நாட்டில் அன்பும் அறனும் அருளும் தாண்டவமாடும். எனவே, மனிதன் கவலைப்பட இடமில்லை. இத்தகைய வாழ்க்கை ஒவ்வொருவரும் பெறத்தக்க வாழ்க்கையன்றோ? உயர்ந்த பண்பாட்டின் அடியாகப் பிறந்த இக்கருத்துகள் சங்ககாலப் புலவர்பெருமக்களின் பண்பாட்டை அல்லவோ உணர்த்துகின்றன!

அந்தணர்: புறநானூற்றுப் பாடல்கள் பல தோன்றிய காலத்தில் வடமொழியாளர் செல்வாக்குத் தமிழகத்தில் நன்கு பரவிவிட்டது. அவர்களை

ஆன்ற கேள்வி அடங்கி கொள்கை நான்மறை முதல்வர்'

(28)

என்று புலவர் பாராட்டினர்; அவர்கள் எதிரே தலை வணங்குக' என்று அரசர்க்கு அறிவுறுத்தினர். வேள்வி செய்தல் சிறப்பாகக் கருதப்பட்டது (15). r

அந்தணர்க்கு ஊர்களும் செல்வமும் நீர்வார்த்துக் கொடுக்கப்பட்டன (351, 362, 367) . அவர்கள் தூண்டுதலால் தமிழரசர் சிலர் வேள்வி செய்யத் தொடங்கினர். சேர மன்னருட் பலர் வேள்வி செய்தமையைப் பதிற்றுப் பத்து