பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

308 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

றைத் தொகுப்பித்தவன் ஆதலால் அவன்மீது புலவர் ஒரு பத்தைப் பாடியிருக்கலாம். அவன் இறுதிப் பத்துக்கு உரியவனாயின் ஐந்தாம் பத்துக்குரிய செங்குட்டுவனுக்கு மிகவும் பிற்பட்டவனாவன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறையைப் போரில் வென்றதாகப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்று (17) கூறுவதால், இப்பாண்டியன் நெடுஞ்செழியன் செங்குட்டுவற்குப் பிற்பட்டவன் என்று கூறலாம்: பதிற்றுப்பத்தின் வைப்பு முறையை நோக்க, இவன் காலம் ஏறத்தாழக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்னலாம்."6 இங்ஙனம் கொள்ளின், இப்பாண்டியனைப் பற்றிய நெடுநல் வாடையும் மதுரைக் காஞ்சியும், நெடுநல்வாடையை ஒத் துள்ள முல்லைப்பாட்டும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டு நூல்கள் என்னலாம். இவை அனைத்திற்கும் பிற்பட்ட நல்லியக் கோடனைப் பற்றிய சிறு பாணாற்றுப்படையும் இம்மூன்றாம். நூற்றாண்டின் இறுதியில் செய்யப்பட்டது எனக் கொள்ளலாம்.

  இதுகாறும் கூறப்பெற்ற செய்திகளைக் கொண்டு குறிஞ்சிப் பாட்டு, பொருநர் ஆற்றுப்படை, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நான்கு பாடல்களும் ஏறத்தாழக் கரிகாலன் காலத்தவை (கி.பி. 75-115) என்றும், (2) மலைபடுகடாம், நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி, முல்லைப்பாட்டு ஆகிய நான்கும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகலாம் என்றும், அனைத்திலும் இறுதி

   6. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் இப்பாண்டியன் காலம் ஏறத்தாழக் கி.பி. 250 என்று குறித்துள்ளனர். History of Tamil Language 8 Literature,. pp. 35–36. ..
  பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் இவன் காலம் கி.பி. 210ஜச் சுற்றியிருக்கலாம் என்பர்—History of S. India,. p. 121.