பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

325


மாக்கியபொழுது, புலவருக்குப் பரிசிலாக வழங்கப்பட்ட இம் மண்டபத்தை மட்டும் இடிக்காமல் விட்டுவிட்டான் என்று திரு வெள்ளறையில் உள்ள அச்சுந்தரபாண்டியன் கல்வெட்டுக் கூறுகின்றது.18

ஓய்மானாட்டு ஊர்களுள் ஆமூர் என்பது ஒன்று. அவ்வூரில் அந்தணர் நிறைந்திருந்தனர் என்று சிறுபாணாற்றுப்படை (வரி 187-188) செப்புகிறது, ஓய்மானாட்டு மன்னனது அரண்மனை வாயில் பொருநர்க்கும் புலவர்க்கும் அடை யாதது போலவே அருமறை காவின் அந்தணர்க்கும் அடை யாதது (வரி 204-206) என்று அப்பாட்டுக் குறிக்கின்றது. இச்செய்தி வேறு எந்த நூலிலும் குறிக்கப்படாதது என்பது கவனிக்கத்தகும். எனவே, புலவர். பாணர் - பொருநர் - கூத்தர் போலவே அந்தணரும் அரசர்களால் பிற்காலத்தில் சிறப்பிக்கப்பெற்றனர் என்பது இதனால் தெரிகிறது. ஆமூர், அந்தணர்க்கு விடப்பட்ட பிரமதேயச் சிற்றூராக இருந்திருக் கலாம் என்று கருதுவதும் பொருத்தமாகும்.

தொண்டைநாட்டுப் பல பகுதிகளையும் கடந்து காஞ் சிக்குச் செல்ல வழி கூறிய பெரும்பாணன், அவ்வழியில் வேதியர் வாழ்ந்த ஓர் ஊரைக் குறிப்பிட்டுள்ளான்; மறை

18. : 'வெறியார் தளவத் தொடைச்செய மாறன்

வெகுண்டதொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப் பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப்

பாலைக்கன்று நெறியால் விடுந்துரண் பதினாறு மேயங்கு

நின்றனவே.' திருவெள்ளறைக் கல்வெட்டு, செந்தமிழ்த் தொகுதி 41, பக் 215 கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலனால் விடப்பட்ட இம்மண்டபம் சுந்தரபாண்டியன் படையெடுப்பின் போது (கி. பி. 1219) இருந்தது என்பது கவனிக்கத் தகும்.