பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

31


பிரிந்ததாகல் வேண்டும்.[1] கன்னடமொழி, கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட காலத்திலேயே வேறுபட்டிருத்தல் கூடியதே என்பது, கி.மு.வில் செய்யப்பட்ட உரோம நாடகமொன்றில் கன்னட மொழிச் சொற்களமைந்த காட்சி ஒன்று காணப்படலால் நன்கறியக்கிடக்கிறது. “வடவேங்கடம் தென்குமரி” எனப் பனம்பாரனார் பாயிரம் தமிழகத் தெல்லை கூறலாலும் தொல்காப்பியர் காலத்துக்கும் முன்னரே (சுமார் கி.மு. 300-க்கு முன்பே ) கன்னடம் தனி மொழியாயிற்றென்னும் உண்மையை உணரலாம்.

மலையாள நாடே தமிழ் நாடாக இளங்கோ அடிகள் காலத்தில் இருந்ததென்பது இலக்கியம் கண்ட சான்று. கன்னடத்தின் தொடர்பாலும், கிரந்த எழுத்துகளின் வன்மையாலும், நம்பூத்ரிகள் செல்வாக்காலும், பௌத்தசமண சமயப் பிரசாரம் வடமொழி கலந்த தமிழில் செய்யப்பட்டமையாலும், அங்கிருந்த தமிழ் கொடுந்தமிழாகி மிகப்பிற்பட்ட காலத்தே வேறு பிரிந்தது. இதனைத் தமிழின் உடன் பிறந்தாள் என்பதைவிட ‘மகள்’ எனக் கூறலே மாண்புடைத்து.[2]

கன்னடம் வேறுபட்ட காலத்திற்குப் பிறகு கன்னடத்தினின்று சிறிதளவு வேறுபட்டுப் பிரிந்தது ‘துளு’ என்னல் தவறாகாது. குடகு மொழி தமிழின் தூய்மையைப் பலவழிகளிலும் போற்றிவருகிறது. அதன் மொழியமைப்பு, நடை ஆகிய இரண்டும் தமிழ்-மலையாள மொழிகளை ஒத்துள்ளது. கன்னடரும் மலையாளிகளும் பழக்கங்களில் பிற்காலத்தில் மாறினாற்போலக் குடகு நாட்டார் மாறாமல் பண்டைத் திராவிடர் நாகரிகத்தை இன்றும் பெரிய அளவில் பின்பற்றுதல் கவனிக்கத் தக்கது.[3]

இனிச் செப்பஞ் செய்யப்படாத திராவிட மொழிகளைக் காண்போம். துதவர் மொழி பழைய கன்னடத்திலிருந்து


  1. C.G, (Int.) p, 26: ‘Dravidic Studles’, p. 32
  2. Comparative Grammar, Int. pp. 18-19.
  3. Ibid.p. 33.