பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


சாணம், சமம், சூதர், மாகதர், வேதாளிகர், மதுரை (மதுரைக் காஞ்சி).

(7) சாலேகம், உரோகிணி (நெடுநல் வாடை).

(8) திலகம், சண்பகம், நந்தி, சேமம் (குறிஞ்சிப்பாட்டு).

(9) மகம், நாடகம், மஞ்சிகை, அமரர் (பட்டினப்பாலை).

(10) வதுவை, தேம் (தேசம், தேயம்), வாதி, நிதி (மலைபடுகடாம்).[1]


  1. சிறுபாணனை ஆற்றுப்படுத்திப் பாடப்பட்டது சிறு பாணாற்றுப்படை எனவும், பெரும்பாணனை ஆற்றுப்படுத்தியது பெரும்பாணாற்றுப்படை எனவும், பொருநனை ஆற்றுப்படுத்தியது பொருநராற்றுப்படை எனவும் வழங்கினாற் போலவே கூத்தரை ஆற்றுப்படுத்தியது கூத்தராற்றுப்படை என்றே சங்ககாலத்தில் பெயர் பெற்றிருத்தல் வேண்டும். இதுவே முறையாகும். இடைக்காலத்தில் பொருத்த மற்ற முறையில் இப்பாடலுக்கு ‘மலைபடு கடாம்’ என்று எவரோ பெயரிட்டுவிட்டனர் எனக் கொள்வதே பொருத்தமாகும். இவ்வாறே புலவர் ஆற்றுப் படையைப் பிற்காலத்தார். திருமுருகாற்றுப்படை என மாற்றிவிட்டனர் என்று நினைத்தல் தகும்.