பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

338


யம்மன் கோவில்களில் சிலம்பைத் தவிர வேறு உருவங்கள் வழிபாட்டிற்காக அமையவில்லை.

“தமிழகத்தில் கண்ணகிக்குக் கோயில் எடுப்பித்த வைபவத்தில் பிரசன்னமாயிருந்து திரும்பியதும் முதன் முதலாக அங்கனாக் கடவையில் கண்ணகிக்கு ஆலயமும் விழாவும் எடுப்பித்துத் தனது உருவச்சிலையை ஆலய முற்றத்தில் நிறுவினன் என்று “புராதன யாழ்ப்பாணம்’” என்னும் நூலில் முதலியார் சி. இராசநாயகம் அவர்கள் கூறிப் போந்தனர். ”

“இங்குக் குறிப்பிட்ட கயவாகுவின் உருவச்சிலை யாழ்ப்பாணத்தில் சர் போல் ஈபீறிஸ் அவர்கள் நடத்திய புதை பொருள் ஆராய்ச்சியில் தலை வேறாகவும் உடல் வேறாகவும் உடைந்து காணப்பட்டமையின், யாழ்ப்பாணம் அரும் பொருட்சாலைக்கு அனுப்பப்பட்டது. கயவாகு மன்னன் காடெங்கும் பத்தினிக்குக் கோயிலும் விழவுஞ் செய்தல் வேண்டுமெனக் கட்டளையிட்டதையிட்டு, யாழ்ப்பாணத்திலும் ஆலயங்கள் எழுந்தனவென்றும் வேலம்பரவையிலுள்ள கண்ணகிக் கோயில் அக் காலத்தில் முதலில் அமைக்கப்பட்டதென்றும்; அதற்குப் பின்பு கட்டப்பட்டவைகளே களையோடை, அங்கனான் கடவு முதலிய இடங்களில் உள்ளவை என்றும் யாழ்ப்பான சரித்திரம்’ என்னும் நூலில் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை கூறியுள்ளார்.”[1]


  1. 3. தினகரன்', 13-7-62-திரு. ம. பொ. செல்வரத் தினம் அவர்கள் எழுதிய கட்டுரை. இலங்கை அரசினர் தமிழில் நடத்தும் பூரீலங்கா என்னும் திங்கள் தாளிலும் இக் கட்டுரை இவ்யாண்டு 9ஆம் இதழில் வெளிவந்துள்ளது: இலங்கையில் கண்ணகி வழிபாடு பற்றிய எல்லா விவரங்களையும் எனக்கு உதவிவரும் வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் அவர்கட்கு எனது உளமார் நன்றி உரியது. .