பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.மா.இராசமாணிக்கனார்

339


இலங்கையில் கயவாகு வேந்தன் கட்டிய கண்ணகியின் கோவிலிலிருந்து அவனது உடைந்த சிலை கண்டெடுக்கப்பட்டது. கண்ணகியின் சிலை இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டு இங்கிலாந்து பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் கண்ணகிக்குக் கோவிலோ விழாக்களோ இன்று இல்லை. ஆயின், இலங்கைத் தமிழரும் சிங்களவரும் ஆண்டுதோறும் பத்தினிக்கு இன்றும் விழா எடுக்கின்றனர். இச்செய்திகள் அனைத்தும் கயவாகுவுக்கும் பத்தினி வணக்கத்திற்குமுள்ள தொடர்பை ஐயமற விளக்குகின்றன அல்லவா??[1]

3. இளங்கோவின் தனிப்பாடல் எதுவும் தொகை நூல்களில் இல்லை என்பதனாலேயே அவர் காலத்தால் பிற்பட்டவராவரோ? முல்லைப்பாட்டைப் பாடிய காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் எட்டுத் தொகை நூற்களில் ஒரு பாடலையும் பாடினார் என்பதற்குச் சான்றில்லை. இது கொண்டு இவர்காலம் பிற்பட்டதென்று கூறலாமா! அடிகள் சேரநாட்டுச் சமணத் துறவியார். அவருடன் நெருங்கிப் பழகியவர் சாத்தனார் ஒருவரே போலும்![2]


  1. 7. (1) “Gajababu brought away from the Choli capital the most venerated relics, of the chosians, the gelden anklats, the image and the books used in the worship of goddess Pathini. The origin of the Devaias in Ceylon and of the Pathini ceremonies now current among the Kapuvas of Ceylon can be traced to this time. Gajababu has ever since become a national hero.”— W.A. de Silva, Ceylon National Review for Jan, 1907.
  2. (2) இலங்கையில் பத்தினி வணக்கம் பற்றிய விவரங் களை அறிய திரு. M. D. இராகவன் என்பார் எழுதியுள்ள பத்தினி வணக்கம் பற்றிய ஆங்கிலக் கட்டுரையை Ethnological Survey of Ceylon No. 3. 1951 srcirgith வெளியீட்டிற் காணலாம். -