பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/351

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

349

}}

“நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்”, என்று இதனைப் பாராட்டி மகிழ்ந்தார்.

திருமணச் சடங்குகள்

கோவலன்-கண்ணகி திருமணத்தை வணிக மகளிர் யானைமீது அமர்ந்து ஊரார்க்கு அறிவித்தனர் என்ற செய்தி கவனிக்கத்தகும். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து குடியேறிய பூவாளூர் (பூவலூர்)ச் செட்டிமாரிடை இவ்வழக்கம் அண்மைக்காலம் வரையில் இருந்துவந்தது என்பது தெரிகின்றது. இது பிற நூல்களில் காணப்படாத செய்தியாகும். அகநானூற்றுப் பாடல்கள் இரண்டனுள் கூறப்பட்ட திருமணமுறை எளிமை வாய்ந்தது. கோவலன்— கண்ணகி திருமணத்தில் மாமுது பார்ப்பான் வேதவிதிப்படி திருமணம் செய்தான்—மணமக்கள் தீவலம் வந்தனர்—முளைப்பாலிகை வைக்கப்பட்டு இருந்தது. எனவே, திருமணத்தில் வேதியர் நுழைவு கி. பி. 2ஆம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது என்பது சிலப்பதிகாரத்தால் தெரிகின்றது.[1]

நடனக்கலை

சிலப்பதிகாரத்தில் உள்ள அரங்கேற்று காதை அக்கால நடனக்கலை வளர்ச்சியை அறியப் பெருந்துணை செய்வதாகும். அரங்கின் அமைதி, கூத்தியின் அமைதி, ஆடலாசிரியன் அமைதி, இசையாசிரியன் அமைதி, கவிஞன் அமைதி. தண்ணுமை ஆசிரியன் அமைதி, குழலோன் அமைதி, யாழாசிரியன் அமைதி, கூத்தி ஆடும் இயல்பு என்பன போன்ற பல செய்திகள் அரங்கேற்று காதையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சேர நாட்டில் கூத்தச் சாக்கையன், சிவபெருமான் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் நடனத்தை நடித்தான் என்பதைக் கூறும் பகுதி


  1. கோவலன் சிராவகன் ஆதலால் திருமணத்தை நடத்தியவன் சமண சமயத்துப் புரோகிதன் என்றும் அறிஞர் கூறுவர்.