பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

தமிழ் மொழி- இலக்கிய வரலாறு


அந்தணர் ஒம்பல், விருந்தெதிர்கோடல் ஆகியவற்றைத் தவறாது செய்வாள் (காதை 16).

(4) மழை பெய்வது தவறினும், உயிர்கள் யாதானும் ஒன்றால் வருந்தினும், அரசன் வெறுக்கப்படுவான். அதனால் குடிமக்களால் பாராட்டத்தகும் நிலையில் அரசுபுரிதல் துன்பந்தருஞ் செயலேயாகும் (காதை 25).

(5) வஞ்சி மாநகரில் பல நாட்டு ஒற்றரும் இருந்தனர் (காதை 25). சங்ககாலத்தில் ஒல்வொரு பேரரசன் தலை நகரிலும் பல நாட்டு ஒற்றரும் இருந்தனர் என்பது இதனால் தெரிகின்றது.

(6) அக்காலத்தில் அரச முத்திரை யிடப்பெற்ற முடங்கல் (முடக்கப்பட்ட பனையோலை) 'மண்ணுடை முடங்கல்’ எனப்பட்டது (காதை 26).

(7) அரசனுக்குக் குருவாய் அமைந்தவன் ஆசான் எனப்பட்டான். அவனும், பெருங்கணி. அறக்களத்து அந்தணர், காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்கள், மந்திரக் கணக்கர் என்பவரும் அரசனோடு அரசியலில் தொட்ர்பு கொண்டவர் ஆவர் (காதை 22).

(8) பாண்டியன் அரண்மனையில் பணியாளராய்க் கூனர், குறளர், ஊமர் இருந்தனர் (காதை 20). இவ்வாறே சேரன் அரண்மனையிலும் கூனர், குறளர், பேடியர் பணி யாளராய் இருந்தனர் (காதை 28).

இளங்கோவடிகள் சிறப்பு

இளங்கோ அடிகள் சமணத்துறவியார் குற்றமற்ற பண்பாடு உடையவர். கோவலனும் கண்ணகியும் இன்பம் துய்த்தனர் என்பதை

"தாரும் மாலையும் மயங்கிக் கையற்று"

(காதை 2 வரி 35)

என்னும் தொடரைக்கொண்டு விளக்கிய திறம் அவரது குற்றமற்ற பண்பாட்டை நன்கு தெரிவிப்பதாகும்.