பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

35


வின் பெரும் பகுதியில் திராவிட மக்கள் இருந்தமையை இனிது விளக்குவதாகும்.[1]

“வங்காள மக்களிடையே மிகப்பரந்த அளவில் திராவிடக் கலப்பு ஏற்பட்டு உள்ளது. வங்காளத்திலும் சூடிய நாகபுரி, ஒரிஸ்ஸா போன்ற இடங்களிற் பரவியுள்ள ‘ப்ரூஹியர்’ திராவிடரே யாவர். ‘காக்’ என்பவரும் இவ்வினத்தையே சேர்த்தவர். இவ்விருவர் தொகை ஏறக்குறைய நாற்பது இலட்சம் ஆகும்.”[2]

வேறு சான்றுகள்

இதுகாறும் கூறியவாற்றால், ஆரியர் வருகைக்கு முன்பு இந்தியா முழுமையிலும் திராவிடமொழி பரவி இருந்தது என்பது நன்கு புலனாயிருக்கும். இங்ஙனம் பரவியிருந்தமை உண்மை என்பதைப் பின்வரும் உண்மைகளும் மெய்ப்பித்தல் காண்க:

“வடமொழியில் சில சொற்கள் வேற்று முகத்துடன் காணப்படுகின்றன, அவற்றின் பகுதி முதலியவற்றை வட மொழித் துணைக்கொண்டு அறியக் கூடவில்லை. அவை வடமொழியல்லாத பழைய இந்திய மொழியைச் சேர்ந்தவையாக இருத்தல் வேண்டும். பழையமொழி ஒன்று வடமொழின் உயிர் நாடியிலேயே கை வைத்துவிட்டதென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.”[3]

கோட்டா (Ghots) என்பது குதிரையைக் குறிக்கும் வட சொல். குர்ரம்-தெலுங்கு, குதிரை-தமிழ். குதிர-மலையாளம், குதுரெ-கன்னடம், குத்ரெ-துளு. குதிரை இந்தியாவில் உள்ளது. எனவே, வடசொல் (கோட்டா) திராவிடச்


  1. Caldwell, Comparative Grammar, Int. p. 37
  2. Col. Dalton, 'Ethnology of Bengal', p. 243.
  3. Dr. Beames, A Comparative Grammar of the Modern Aryan languages of India, p. 128.