பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


அளவில் ஏற்பட்டதாற்றான் பிராக்குரு மொழிகள் தோன்றலாயின.”[1]

“வட இந்திய ‘பிராமி’ எழுத்து முறை ஆரியரால் கொள்ளப்பட்டு வளர்க்கப்பட்டது. தென் பிராமி எழுத்துகள் திராவிடரால் வளர்க்கப்பட்டவை.”[2]

“பிராமி எழுத்துகள் தமிழுக்கெனவே ஏற்பட்டவை என்பதும், அவை வேறு விகற்பங்களுடன் வடமொழியாக ஆரியரால் மாற்றிக்கொள்ளப்பட்டன என்பதும் அறியக்கிடக்கின்றன.”[3]

வடமொழியையும் பிராக்ருத மொழிகளையும் திராவிட மொழிகளையும் நன்கு ஆராய்கையில், ஒரு காலத்தில் வட இந்தியா முழுமையும் திராவிடர் இருந்தனர் என்பது நன்கு புலனாகும். பாலி முதலிய பிராக்ருத மொழிகள் வடமொழிக்குரிய முதற்கூட்டு உருபுகளை (Pre-Positions) அறவே விட்டுத் திராவிட மொழிகள் பயன்படுத்தும் பிற்கூட்டு உருபுகளை (Post-Positions) கையாளலாயின.[4]

முடிவுரை

மேலே கூறப்பெற்ற ஆராய்ச்சியாளர் கூற்றுகளைக் கொண்டு-ஆரியர் வருகைக்கு முன்பு வட இந்தியாவிலும் திராவிட மொழி பரவி இருந்தது என்பதும், ஆரியர் வந்து ரிக்வேதம் செய்த காலத்தில் அந்நூலுள் திாரவிடச் சொற்களும் இடம் பெற்றன என்பதும், திராவிட மொழியின் அமைப்பைப் பெரும்பாலும் காட்டவல்லது தமிழே என்பதும் நன்கு புலனாதலைக் காணலாம்.


  1. Dr. S. K. Chatterji, Origin and Development of the Bengali Language, vol i, pp. 42-45.
  2. Heras's Article, The New Review, p. 7, July 1936.
  3. T. N. Subramanyan, Article in "Kalai Magal", Part 70
  4. Dravidic Studies, Part iii pp. 57 and 61.