பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர்,

“உறைவான் உயர்மதிற் கூடலில் ஆய்ந்தவொள் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ”

என்று மதுரையில் புலவர் தமிழாராய்ந்த திறத்தைத் திருக் கோவையாரிற் (20) குறித்துள்ளார்.

அகநானூற்று உரைப்பாயிரம் செய்த இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவன் அப்பாயிரத்தில்,

“பழுதில் கொள்கை வழுதியர் அவைக்கண்
அறிவுவீற் றிருந்த செறிவுடை மனத்து
வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ
அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை”

என்று கூறியிருத்தல் கவனிக்கத் தக்கது.

நல்லிசைச் சான்றோர் மதுரையில் பாண்டியர் அவையில் கூடியிருந்து முத்தமிழையும் வளர்த்தனர் என்பதை, இவ்வடிகள் தெரிவிக்கின்றன அல்லவா?

யாப்பருங்கலக் காரிகை என்னும் இலக்கண நூல் கி. பி. 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டிருக்கலாம்.[1] அந்நூலில் வரும் மேற்கோள் செய்யுள் ஒன்று, ‘சேரன் வில் சிறப்பை உடையவன்; பாண்டியன் தமிழ்ச் சிறப்பு உடையவன்; சோழன் நெல்சிறப்பை உடையுவன்’, என்னும் பொருள்பட வந்துள்ளதைக் காண்க.

“வில்லுடையான் வானவன் வியாத் தமிழுடையான்
பல்வேறுக டற்றானைப் பாண்டியன் - சொல்லிகவா


  1. சீநிவாசப்பிள்ளை, தமிழ் வரலாறு, இரண்டாம் பகுதி, பக், 230.