பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


புத்தர் காலத்தில் வட இந்தியாவில் மகதநாடு சிறப்புற் றிருந்தது. அக்காலத்தில் அதனைப் பிம்பிசாரன்.17 (கி. மு. 525-500) என்பவனும், அஜாத சத்ரு (கி. மு. 500-476) என்பவனும் அரசாண்டனர். இவர்களுக்குப் பின்பு தர்சகன் (கி. மு. 475-450) , உதயணன் (கி. மு, 450-425) என்பவர் அரசாண்டனர். இந்த உதயணன் காலத்தில் வாழ்ந்தவன் தான் வத்சநாட்டு மன்னனான உதயணன் என்பவன்."18

ஏறத்தாழத் கி. மு. 425 இல் நந்திவர்த்தனன் என்பவன் மகதநாட்டை ஆளத் தொடங்கினான். அவன் கி.மு. 400 வரையில் ஆண்டான். அவனுக்குப் பின்பு மகாபத்ம கந்தன் என்பவன் கி. மு. 375 முதல் 350 வரையில் ஆண் டான். அவனுக்கு எட்டு ஆண்மக்கள் இருந்தனரென்றும், தந்தையும் மக்களும் கவருந்தர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்றும் வரலாறு கூறுகிறது. நந்தர்கள் மிக்க செல்வத்தைப் பெற்றிருந்தனர் என்று கிரேக்க ஆசிரியர்களும், மாமூலனார் என்ற சங்ககாலப் புலவரும் குறித்துள்ளனர்."19

ஏறத்தாழக் கி பி. 327 இல் அலெக்ஸாண்டர் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்து வந்து வெற்றி கண்டார். அவரது வெற்றிக்குப் பிறகு கிரேக்கர்கள் வட இந்தியாவில் தலைகாட்டத் தொடங்கினர். அக்காலத்தில் வட இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் வாணிகத் தொடர்பு இருந்திருக்க வேண்டுமென்பது சாணக்கியர் தமது பொருள் நூலில் எழுதியிருப்பதைக் கொண்டு உணரலாம். மேற்கு ஆசியாவுடனும் எகிப்துடனும் தென்னிந்தியா நடத்தி

17. தமிழில் பிம்பிசாரகதை என்னும் ஒரு காவியம் இருந்தது என்பது நீலகேசி உரையினால் தெரிகின்றது-பக். 71, செ. 190 உரை.

18. இவன் வரலாறே தமிழில் உள்ள பெருங்கதை என்பது. 19. History of India, vol 1, p. 87;

அகநானூறு 265.