பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

வந்த கடல் வாணிகம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆந்திரர்கள் தம்மாட்சி பெற்றிருந்தனர். தமிழ் அரசுகளும் விளக்கமுற்றிருந்தன."20

நந்தர்களுக்குப் பின்பு சந்திரகுப்தமெளரியன் மகத நாட்டு மன்னனானான். அவனும் அவன் மரபினரும் ஏறத்தாழக் கி. மு. 188 வரையில் வட இந்தியாவின் பேரரசர்களாய் விளங்கினர். சந்திரகுப்த மெளரியன் வடஇந்தியா முழுமையும் வென்று பேரரசனாய் விளங்கினான். அவனுடைய அமைச்சனே சாணக்கியன் என்றும் கெளடில்யன் என்றும் கூறப்பெற்ற பேரறிஞன். அவன் சிறந்த பொருள் நூல் ஒன்றை எழுதினான். அந்நூலை மூன்று பெரும்பகுதிகளாகப் பிரிக்கலாம். முதற்பகுதி அரசனைப் பற்றியும்: அவனுடைய ஆட்சிக்குழுவைப் பற்றியும், அரசாங்கப் பிரிவு களைப் பற்றியும் கூறுவது. இரண்டாம் பிரிவு பலவகைக் குற்றங்களுக்கு உரிய தண்டங்களைப் பற்றிப்பேசுவது. மூன்றாம் பகுதி உள்நாட்டுச் சட்டம், அரசதந்திரம், போர் ஆகியவற்றை விளக்குவது. இப்பொருள் நூல் தாப் ரொபேன்" 21(இலங்கை) முத்துகளையும் பாண்டிய கவாடம் என்ற முத்துகளையும் உயர்த்திக் கூறியுள்ளது; மதுரையில் நெய்யப்பெற்ற மெல்லிய ஆடைகளைப்பற்றியும் குறித் துள்ளது.'22

சந்திரகுப்த மெளரியன் காலத்தில் கிரேக்க அரசியல் தூதனாய்ப் பாடலிபுரத்தில் ஒருவன் தங்கியிருந்தான். அவன் பெயர் மெகஸ்தனிஸ் என்பது. அவன் தான் கண்டவற்வற்றையும் கேட்டவற்றையும் பற்றிச் சில குறிப்புகள் எழுதி

20. History of Indian, Vol. i., p. 105. 21. தாம்பன்னி' என்று இலங்கை பண்டைக்காலத்தில் பெயர் பெற்றிருந்தது. அயல் நாட்டார் அப்பெயரைத் 'தாப் ரொபேன்’ என்று வழங்கலாயினர்.-History of Ceylon, vol. 1. part 1, (pp. 16–17) Publication of the University of Ceylon.) .

22. Ibid. p. 170.