பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார்77


வைத்தான். அக்குறிப்புகள் அடங்கிய நூலுக்கு இண்டிகா என்பது பெயர்.

அந்த நூலில் பாண்டிய நாட்டைப் பற்றியும் அந்த நாட்டு அரசியைப்பற்றியும் மெகஸ்தனிஸ் குறித்துள்ளான், அரசியின் படையில் ஐந்நூறு யானைகளும் நாலாயிரம் குதிரைகளும் இருந்தன என்றும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் வீரர் இருந்தனர் என்றும் , பாண்டிய நாட்டில் முத் தெடுக்கும் தொழில் நடைபெற்றது என்றும் குறித்துள்ளான்.”23

சந்திரகுப்த மெளரியன் தனது ஆட்சி இறுதியில் பத்திரபாகு என்ற சமண முனிவருடன் மைசூர் நாட்டிலுள்ள சிரவணபெள்குளா (வெள்ளைக்குளம்) என்னும் இடத்தை அடைந்தான். அங்குத் தவம் கிடந்து முத்திபெற்றான் என்று சமண நூல்கள் கூறுகின்றன."24

சந்திரகுப்தன் மகனான பிந்துசாரன் கி. மு. 301 முதல் 273 வரையில் அரசாண்டான். அவன் தமிழகம் ஒழிந்த தக்கணப் பகுதி முழுமையையும் வென்றான். பிந்துசாரன் தமிழகத்தையும் வெல்லப் படையெடுத்தான். ஆயினும் அப்படையெடுப்புப் பயனற்றுப் போயிற்று. ஏறத்தாழக் கி. மு.165 இல் கலிங்க மன்னனாய் முடிசூட்டிக்கொண்ட காரவேலன் என்பவன், தமிழ்வேந்தர்கள் தம்முள் ஒன்று பட்டுத் தனக்கு முன்னே 113 ஆண்டுகளாக வலிமை பெற்று இருந்தார்கள் என்றும் அவர்களது ஒன்றுமை தனக்கு இன்னல் விளைப்பது என்றும் எண்ணித்தான் அவர்தம் கூட்டணியை ஒழித்ததாகவும் ஒரு கல்வெட்டில் குறித்துள்ளான். இங்ஙனம் அவன் குறிப்பிட்ட தமிழரசர் ஒற்று

23. History of Ceylon, Vol. I, Part I, p. 170;

இது மதுரையை ஆண்டதாகத் திருவிளையாடல் கூறும் தடாதகைப் பிராட்டியைக் குறித்ததாகுமோ?

24. History of India vol 1, p. 113