பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

நாட்டைக் கைப்பற்றி ஏறத்தாழக் கி. பி. 300 முதல் ஆளத் தொடங்கினர் எனலாம். காஞ்சி அவர்தம் தலைநகரமாயிருந்தது.

சமயநிலை

பிராமணங்களின் காலத்தில் வேதியர் தமிழகத்தில் நுழைந்தனர். அவர்தம் வடமொழி தமிழகத்தில் பரவலாயிற்று அரசர்கள் வேதவேள்விகள் செய்யத் தொடங்கினர். காலப்போக்கில் சிவன், திருமால் முதலிய தேவர்கட்குக் கோவில்கள் எழுந்தன; விழாக்களும் பூசைகளும் நடந்தன. ஒவியம், சிற்பம், இசை, நடனம் முதலிய நுண்கலைகள் வளர்ச்சி பெற்றன. பெளத்த சமய ஆண் பெண் துறவிகளும், சமண சமய ஆண் பெண் துறவிகளும் தமிழகத்தில் மடங்களில் தங்கிச் சமயப் பிரசாரம் செய்தனர். பலவகைச் சமயங்கள் இருந்தபோதிலும், அவை வெளிப்படையாகப் பூசலிடவில்லை. தமிழர் தத்தம் விருப்பம்போல அச்சமயங்களைத் தழுவினர்.

பெளத்த சமயம் சாதவாகனர் ஆட்சியில் சிறந்த முறையில் ஆந்திர நாட்டில் வளர்ச்சி பெற்றது. ஆந்திர நாட்டுத் தலைநகரான அமராவதியில் பெரிய கோவில்கள் கட்டப் பட்டன. அவை ஏறத்தாழக் கி. மு. 200 முதல் கி. பி. 200 வரையில் கட்டப்பட்டவையாகும். அவற்றில் புத்தருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்கள் கண்டு வியக்கத் தக்கவை.[1]

3. இலங்கை வரலாறு

தமிழகத்திற்கு ஏறத்தாழ முப்பது கல் தொலைவில் உள்ள கடல் கடந்த நாடு இலங்கையாகும். அது ஒரு தீவு. அது வடக்குத் தெற்காக 270 கல் நீளமும் கிழக்கு மேற்காக 140 கல் அகலமும் உடையது. அதன் வட பகுதியில் யாழ்ப்பாண நாடு அமைந்துள்ளது. அதனைச் சுற்றிலும்


  1. 43. Ibid. pp. 233—234.