பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

87

களின் காலமாகிய கி.பி 9, 10-ஆம் நூற்றாண்டுகளில் காவிரியாற்றின் வட கரையைக் 'கரிகாலக் கரை' என்றே மக்கள் வழங்கிவந்தனர் என்பது தெள்ளிதிற் புலனாதல் காண்க. இதுபற்றியே இவனைப் "பொன்னிக் கரை கண்ட பூபதி" என்று கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலாவிற் புகழ்ந்துள்ளனர். [1]

வங்க நாசிக திஸ்ஸன் மகனே சிலப்பதிகாரத்திற் குறிக்கப் பெற்ற 'கடல்சூழ் இலங்கைக் கயவாகு' வேந்தன். அவனை முதலாம் கஜபாஹு என்று இலங்கை வரலாறு கூறும். அவன் ஆட்சிக் காலம் கி.பி. 114-136. அவன் காலத்தில் இலங்கையில் இரண்டு அரச மரபின் கிளையினர் பிரிந்திருந்தனர். நாடு முழுமையும் தன் ஆட்சியிற் கொண்டுவர எண்ணிய கயவாகு, மற்றொரு கிளையின் அரச மகளை மணந்தான்; இந்த மணவுறவினால் இலங்கை முழுமைக்கும் இறைவனானான்.

கயவாகு சோழ நாட்டின்மீது படையெடுத்துச் சென்று, பன்னீராயிரம் தமிழரைச் சிறை செய்து இலங்கைக்குக் கொண்டுவந்தான் என்றும், பத்தினியின் காற் சிலம்பைக் கொண்டு வந்தான் என்றும் இலங்கைக் கதைகளும் நாட்டுப் பாடல்களும் கூறுகின்றன. கயவாகு சேரன் செங்குட்டுவனுக்கு நண்பன் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. சோழனுடன் பகைமை கொண்ட கயவாகு சேரனுடன் சேர்ந்ததில் வியப்பில்லை. கயவாகு இலங்கையில் பத்தினி வணக்கத்தை ஏற்படுத்தினான் என்று இலங்கைக் கதைகளும் நாட்டுப் பாடல்களும் நவில்கின்றன. பத்தினி வணக்கம் இன்றும் சிங்களவர் சமயத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பது இங்கு அறியத்தகும்.[2]

அபயநாகன் என்ற சிங்கள இளங்கோ தென் இந்தியா


  1. 46. டி.வி.சதாசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் சரித்திரம், மூன்றாம் பகுதி, பக். 84-86,
  2. 47. History of Ceylon, Vol. I, Part 1, pp. 183-185.