பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

89


உள்நாட்டு வாணிகமும் சிறப்புற நடைபெற்றது. தலை நகரான அநுராதபுரத்தின் நான்கு வாயில்கட்கு அருகில் வணிக இடங்கள் இருந்தன. அவை நியமம் (வணிக இடங்கள்) என்று பெயர் பெற்றன. உள்நாட்டு வணிக இடங்கள் நகரங்கள் எனப்பட்டன.[1]

ஹிப்பலாஸ் (Hippalos) என்ற கிரேக்க அறிஞன் பருவக் காற்றுகளின் துணையைக் கொண்டு செங்கடலிலிருந்து இந்தியப் பெருங்கடல் வழியாக இந்தியாவிற்குக் கப்பல்களை எளிதில் செலுத்தலாம் என்று கி.மு.முதல் நூற்றாண்டில் கண்டறிந்தான். இக்கண்டு பிடிப்பைக் கிரேக்கர்களும் ரோமர்களும் பயன்படுத்திக்கொண்டனர். அது முதல், இலங்கைக்கும் மேல் நாடுகளுக்கும் நேரான கடல் வாணிகத் தொடர்பு ஏற்பட்டது. அதற்கு முன்பு அத் தொடர்பு ஏற்படவில்லை. ஆயினும் தமிழகத்துத் துறைமுக நகரங்களிலிருந்து இலங்கைப் பொருள்கள் மேல்நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. தமிழ் வணிகர் ஆமை ஒடுகள், மெல்லிய ஆடைகள் முதலிய ஈழ நாட்டுப் பொருள்களை வாங்கி அயல் நாடுகளுக்கு அனுப்பி வந்தனர்.

பிளைநி (கி.பி. 24-79), பெரிப்ளூஸ் (கி.பி.60) நூலின் ஆசிரியர் ஆகிய மேனாட்டு யாத்திரிகர் இலங்கையைப் பற்றி நன்கு எழுதியுள்ளனர். கிளாடியஸ் சீசர் (கி.பி. 41-54) காலத்தில் சிங்கள அரசனால் அனுப்பப்பட்ட அரசியல் தூதர் நால்வர் ரோம் நகரத்திற்குச் சென்றனர். இங்ஙனம் இலங்கை தனது கடல் வாணிகச் சிறப்பால் அயல் நாடுகளுக்குத் தெரியலாயிற்று. கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இந்தியாவையும் இலங்கையையும் அறிந்த தாலமி என்ற மேனாட்டு யாத்திரிகரும் இலங்கையைப் பற்றி எழுதி யுள்ளனர். [2]


  1. 49 ibid. pp. 224–226.
  2. 50. Ibid. pp. 16–17.