பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


4, 5, 7, 8, 9, 11, 12, 14, 15, 16, 20 ஆம் எண்கள் சுட்டும் தொடர்களைக் காண்கையில், மேற் கூறப்பெற்ற உண்மையை எளிதில் உணர்வர்.

தொல்காப்பியத்தின் பழைமை

தொல்காப்பியம்-எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் என்பவற்றிற்குக் காலத்தாற் முற்பட்டது என்பது பலர் கொள்கை, பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள் தொல்காப்பியம் மேற்சொல்லப் பெற்ற நூல்களுக்குக் காலத் தால் பிந்தியது என்று கூறியுள்ளனர். இவர் கூறியுள்ள காரணம் ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்ந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சியாளர் வித்துவான் க. வெள்ளை வாரணனார் தமது 'தொல் காப்பியம்’ என்னும் ஆராய்ச்சி நூலில் மறுத்துள்ளார் (பக். 6-127,

இலக்கண நூல் செய்யும் ஆசிரியன் தன் காலத்தில் உள்ள எல்லா இலக்கிய நூல்களையும் இலக்கண நூல்களையும் நன்கு ஆராய்ந்த பின்பே இலக்கண விதிகளை அமைப்பது இயல்பு: உலக வழக்கில் உள்ள சொற்கள், செய்யுள் வழக்கிலுள்ள சொற்கள் ஆகிய இவற்றை ஆராய்ந்து விதி கூறுதல் இயல்பாகும். தொல்காப்பியர் புறநானூறு முதலிய நூல்களுக்குப் பிற்பட்டவராயின், அவற்றின் கண் காணப்படும் வழக்காறுகளை உள்ளத்துள் வைத்தே நூல் செய்திருப்பார். அவர் மேற்கூறப்பெற்ற நூல்களுக்குக் காலத்தால் முற்பட்டவர் ஆயின், பின் நூல் களிலுள்ள மாறுதல்களுக்கு அவர் பொறுப்பாளியாகார். இந்த உண்மையை நினைவிற் கொண்டு கீழ்வரும் செய்தி களைக் காண்போம்:

அகச்சான்றுகள்

(1) சகரமெய், அ ஐ ஒள என்னும் மூன்று உயிரோடும் கூடி மொழிக்கு முதலில் வராது என்பது தொல்காப்பிய விதி.