பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gufigCurrif susmi&sluílö umráS^^r -^gps*- - ek *afarrssr 95 "தமிழ்ப் பெண்களின் பாட்டைக் கையெடுத்து வணங்குகிறோம். ஆனால் அதில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் பல இருக்கின்றன” என்று பாரதி குறிப்பிடுகிறார். தமிழகத்தின் பாரம் பரியக் கலை வடிவங்களில் கூத்து என்பது ஒரு முக்கியமான, பிரபலமான மக்களுக்கிடையில் செல்வாக்கு பெற்ற ல வடிவங்களில் ஒன்றாகும். ஆடலும் பாடலும் இணைந் கூத்தாகும். இசை, தாளம், அபிநயம் முதலியவற்றின் இணைப்பே கூத்தாகும். அபிநயமே கூத்தின் உயிர் என்று பாரதி குறிப்பிடுகிறார். நாட்டிய சாஸ்திரத்தின் இலக்கணங்கள் பற்றி ரச பண்டாரம்” என்னும் சமஸ்கிருத சாஸ்திரம் விவரித்துக் கூறுவதைப் பற்றி பாரதி குறிப்பிட்டு, 'லோக நடையினாலே சாஸ்திரம் பிறக்கிறது. அந்த சாஸ்திரத்தைப் பயிற்சியினாலே விஸ்தாரப் படுத்துகிறார்கள். ரச திருஷ்டி ஏற்படுவதற்கு இயற்கையே மூலம். ரச வான்களுடைய பழக்கத்தாலும், பக்தி வழிகள் அனுசரிப்பதானாலும் ஒருவன் ரசக் காட்சியை வருவித்துக் கொள்ளலாம். “ராகத்து வேஷங்களை ஜயிப்பதானாலே ஒருவர் சித்த சமாதியடைகிறார். அப்போது ஞான திருஷ்டி உண்டாகிறது. அந்த ஞான திருஷ்டியுடையவர்கள் புறப்பயிற்சியில்லாமலே சாத்திரங்களுக்குக் கண்ணாடி போல் விளங்குவார்கள்” என்று பாரதி கூறுகிறார். பாரதியாருடைய இந்த உரைநடைப் பகுதியில் வடமொழிச் சொற்கள் நிறைந்த ஒட்ட நடையைக் காணலாம். பாரதி அறிவுக் கூர்மை மிக்கவர். அவர் ஒரு தெளிந்த ஞானி. பத்திரிகையாளர் என்னும் முறையில் சகல துறை ஞானமும் பெற்றவர். அவருடைய மொழிநடை இயல்பானது.